பிரதமர் அலுவலகம்

குஜராத் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் ஒற்றுமைச்சிலை அருகே சுற்றுச்சூழலுக்கு ஏற்க வாழ்க்கை முறை (லைஃப்) இயக்கத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்


ஐ.நா. பொதுச்செயலாளர் திரு அன்டனியோ குட்ரசுடன் இருதரப்பு பேச்சுக்களில் கலந்து கொண்டார்

இந்த முன்னெடுப்பு மற்றும் உறுதிமொழி ஆதரவுக்காக உலகத் தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்

சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கைகளை கடைப்பிடிக்க இந்தியா மேற்கொண்ட அர்ப்பணிப்பால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டது: ஐநா பொதுச்செயலாளர்

கோவாவுடன் மூதாதையர் தொடர்பு திரு குட்ரசுக்கு உள்ளது, அவரை குஜராத்திற்கு வரவேற்பது குடும்ப உறுப்பினரை வரவேற்பது போல் உள்ளது: பிரதமர்

பருவநிலை மாற்றம் என்பது கொள்கை வடிவமைப்புக்கு அப்பாற்பட்டது

“பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் ஜனநாயகப்படுத்துகிறது, இதில் அனைவரும் பங்கேற்க முடியும்”

“சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் நம் அனைவரையும் சுற்றுச்சூழலின் அறங்காவலராக மாற்றியுள்ளது”

“சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் பூமியின் மக்களை கோள்களைச் சார்ந்த மக்களாக ஒன்றிணைக்கிறது

குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி' மற்றும் சுற்றுப்பொருளாதாரம் ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்களின்

Posted On: 20 OCT 2022 1:12PM by PIB Chennai

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரசுடன் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்றார். அதன் பின்னர் குஜராத்தின் கெவாடியா, ஏக்தா நகரில் உள்ள , ஒற்றுமை சிலையின் அருகே சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை தொடங்கிவைத்தார். ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஐ.நா சபையின் அனைத்து பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 நாடுகளின் தலைவர்களால் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் தொடங்கப்பட்டது குறித்த வீடியோ வாழ்த்து செய்திகளும் ஒளிபரப்பப்பட்டன.

  இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரசுக்கு இந்தியா இரண்டாவது வீடு போன்றது என்றும், அவர் தனது இளமை பருவத்தில் பலமுறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் என்றும் கூறினார். இந்தியாவில் கோவா மாநிலத்துடன் திரு குட்ரசின் மூதாதையர் தொடர்பை அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கு வருகை தரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதற்காக திரு குட்ரசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவரை குஜராத்திற்கு வரவேற்பது குடும்பத்தில் உள்ள ஒருவரை வரவேற்பது போன்றது என்றும் குறிப்பிட்டார்.

 சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்க முன்முயற்சியை மேற்கொள்வதற்காக இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஆதரவைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு மோடி, இந்தியாவின் பெருமைக்குரிய சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலையான ஒற்றுமை சிலைக்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் நடைபெறுவதாக கூறினார். "உலகின் மிகப்பெரிய சிலை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு உத்வேகம் அளிக்கும்" என்று அவர் கூறினார்.

"தரநிலைகள் விதிவிலக்காக உள்ள போது, ​​பதிவுகள் மிகப்பெரியதாக இருக்கும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். குஜராத்தில் நடைபெறும் இந்த தொடக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துகூறிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நடவடிக்கைகள் மற்றும் பருவநிலைப் பாதுகாப்பு ஆகியவற்றை தொடங்கிய நாட்டிலேயே முதல் மாநிலம் குஜராத் என்று தெரிவித்தார். கால்வாய்களில் சூரிய தகடுகளை நிறுவுவது அல்லது மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்குவது எதுவாக இருந்தாலும், குஜராத் எப்போதும்   முன்னோக்கி வருவதாக குறிப்பிட்டார்.

 பருவநிலை மாற்றம் என்பது கொள்கையுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை மட்டுமே என்ற நடைமுறையில் உள்ள கருத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார், இது ஒரு சிந்தனை செயல்முறைக்கு வழிவகுப்பதோடு, அனைத்து முக்கிய பிரச்சினையையும் அரசிடமோ அல்லது சர்வதேச அமைப்புகளிடமோ மட்டுமே விட்டுவிடுகிறது. மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அனுபவித்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் எதிர்பாராத பேரழிவுகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். பருவநிலை மாற்றம் என்பது கொள்கை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும், சுற்றுச்சூழலுக்கு தனிமனிதனாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் பங்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தாங்களாகவே கண்டறிந்துள்ளனர் என்பதை இது தெளிவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

“மிஷன் லைஃப் என்ற மந்திரம் 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்பதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  அதன் பயன்களை  குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது இந்த பூமியின் பாதுகாப்பிற்காக மக்களின் சக்தியை இணைக்கிறது என்றும், அதை சிறந்த முறையில் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறினார். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் ஜனநாயகப்படுத்துகிறது, இதில் அனைவரும் பங்கேற்க முடியும் என்று தெரிவித்தார். "சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய தூண்டுகிறது. நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்று சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் நம்புவதாக பிரதமர் கூறினார். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவில் எல்இடி பல்புகளை  சார்ந்து இருப்பதற்கான உதாரணத்தை அவர் கூறினார். "இது பெரிய சேமிப்புக்கும், சுற்றுச்சூழல் நன்மைகளுக்கும் வழிவகுத்ததோடு இது தொடர்ச்சியான, நிரந்தர  பயன் அளிக்கக்கூடியது" என்று பிரதமர் கூறினார்.

குஜராத், மகாத்மா காந்தி பிறந்த இடம் என்று குறிப்பிட்ட பிரதமர், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தையும், பல காலங்களுக்கு முன்பே புரிந்துகொண்ட சிந்தனையாளர்களில் அவரும் ஒருவர் என்று தெரிவித்தார். அவர் அறங்காவலர் என்ற கருத்தை உருவாக்கினார் என்றும் கூறினார்.  சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் நம் அனைவரையும் சுற்றுச்சூழலின் அறங்காவலர்களாக ஆக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  ஒரு அறங்காவலர் என்பவர்  வளர்ப்பவர் என்றும், சுரண்டுபவர் அல்ல என்றும் அவர்  கூறினார்.

 சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், பி3 மாதிரியின்  முயற்சியை ஊக்கப்படுத்துகிறது என்று பிரதமர் விவரித்தார்.  அதாவது, கோள்களைச் சார்ந்த மக்கள். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், பூமியில் உள்ள மக்களை கோள்களைச் சார்ந்த மக்களாக ஒன்றிணைக்கிறது, அவர்கள் அனைவரையும் அவர்களின் எண்ணங்களில் ஒன்றிணைக்கிறது என்று கூறினார்.  இது 'கோள்களின் வாழ்க்கை முறை கொள்கைகளின் அடிப்படையில், கோள்களுக்காக மற்றும் கோள்களால் செயல்படுகிறது' கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்பதன் மூலம் மட்டுமே எதிர்காலத்திற்கான பாதையை அமைக்க முடியும் என பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையை வழிபடும் பாரம்பரியம் உள்ளது என்று நினைவு கூர்ந்த அவர், நீர், பூமி, நிலம், நெருப்பு போன்ற இயற்கையின் கூறுகளின் முக்கியத்துவத்தை வேதங்கள் துல்லியமாகக் குறிப்பிடுவதாக தெரிவித்தார். “பூமி நமது தாய், நாம் அவளுடைய குழந்தைகள்”  என அதர்வனவேதத்தில்  உள்ளதை மேற்கோள் காட்டினார். 

 குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறு சுழற்சி, சுற்றுப்பொருளாதாரத்தின் கருத்து குறித்து விளக்கிய பிரதமர், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டார். உலகின் மற்ற பகுதிகளில் இது பரவலாக உள்ளது என்று தெரிவித்த பிரதமர், இயற்கையுடன் நாம் நல்லிணக்கத்துடன் செல்வதற்கு ஊக்கமளிப்பதாக கூறினார். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் இயற்கையின் பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு வாழ்க்கை முறையையும் உள்ளடக்கும் என்றும். இது நம் முன்னோர்கள் ஏற்றுக்கொண்டதுபோல், அதை இன்று நம் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்ற முடியும்" என்று அவர் கூறினார்.

 பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளதாக கூறிய பிரதமர், இன்று, “உலகளவில் சராசரியாக ஆண்டுக்கு 4 டன் அளவில் கார்பன் வெளியீடு இருக்கும் போது, ​​இந்தியாவில் அது சுமார் 1.5 டன்கள் மட்டுமே என்று தெரிவித்தார். இருந்தபோதிலும், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்க இந்தியா முன்னணியில் உள்ளதாக கூறினார். இலவச எரிவாயு திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ‘அமிர்த நீர் நிலைகள், கழிவில் இருந்து செல்வம் போன்ற முன்னெடுப்புகள் குறித்து பிரதமர் குறிப்பிட்டார்.  இந்தியா  இன்று  உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நான்காவது பெரிய திறனைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். “இன்று நாம் காற்றாலை ஆற்றலில் நான்காவது இடத்திலும், சூரிய சக்தியில் ஐந்தாவது இடத்திலும் இருப்பதாக  கூறினார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 290 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், காலக்கெடுவிற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து 40 சதவீத மின்சாரத் திறனை அடைவதற்கான இலக்கையும் நாங்கள் அடைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார். பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கையும் அடைந்துள்ளோம், காலக்கெடுவுக்கு 5 மாதங்களுக்கு முன்பே. தேசிய ஹைட்ரஜன் இயக்கம் மூலம், இந்தியா சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக. இது இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளின் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய உதவும்” என்று பிரதமர் மேலும் கூறினார். முன்னேற்றமும் இயற்கையும் எவ்வாறு கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பிரதமர் கூறினார். தற்போது இந்தியாவும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, நமது வனப்பகுதியும் அதிகரித்து வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

 ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே கட்டமைப்பு என்ற உலகளாவிய பிரச்சாரத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தியா இப்போது உலகத்துடனான தனது கூட்டாண்மையை மேலும் அதிகரிக்க விரும்புவதாக கூறினார், அதே நேரத்தில் அத்தகைய இலக்குகளை நோக்கி தனது உறுதியை வலுப்படுத்த விரும்புகிறது என்று குறிப்பிட்டார். “பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை உருவாக்குவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான தனது கருத்தை இந்தியா உலகிற்கு உணர்த்தியுள்ளது என்று கூறினார்.  அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் இந்த தொடரின் அடுத்த படியாகும் என்றார் அவர்.

 இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றும் போதெல்லாம், உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் குறிப்பிட்டார். “சர்வதேச யோகா தினத்தை இந்தியா முன்மொழிந்த போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.  இன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இது ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தார். சர்வதேச தினை ஆண்டை உதாரணமாகக் கூறிய பிரதமர், இதற்கு  ஐநா ஆதரவு இருந்ததாக குறிப்பிட்டார்.  இந்தியா தனது பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தானியங்களுடன் உலகை இணைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு சர்வதேச தினை ஆண்டு குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார், "சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், அதை உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்வதில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். இயற்கையை யார் பாதுகாக்கிறார்களோ, அவர்களை இயற்கை பாதுகாக்கிறது என்ற மந்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். நமது சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை  பின்பற்றுவதன் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குவோம் என்று தான் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டு தமது உரையை நிறைவு செய்தார்.

 பின்னர் பேசிய ஐநா பொதுச் செயலாளர் திரு அன்டோனியோ குட்ரஸ், சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் அத்தியாவசிய மற்றும் நம்பத்தகுந்த உண்மைகளை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கைகளை கடைப்பிடிக்க இந்தியா மேற்கொண்ட அர்ப்பணிப்பு பெரிதும் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், வெளியுறவு அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

**************

 

IR/AG/SM/SNE



(Release ID: 1869671) Visitor Counter : 558