பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் மஹாகால் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மஹாகலில் பூஜை, ஆரத்தி மற்றும் தரிசனத்திற்கு பிறகு, பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 11 OCT 2022 9:25PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மஹாகால் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மஹாகல் கோயிலின் உள் கருவறையில் பூஜை, ஆரத்தி மற்றும் தரிசனத்திற்கு பிறகு, பொது நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

 பிரதமர் வருகையையொட்டி அவர் கவுரவிக்கப்பட்டார் அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற பாடகர் திரு கைலாஷ் கெரின் பாடல் மற்றும் ஒளி, ஒலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மஹாகால் கடவுளை வாழ்த்தி தனது உரையை தொடங்கிய பிரதமர், “ஜெய் மஹாகால்! உஜ்ஜயினியின் இந்த ஆற்றல், இந்த உற்சாகம்! அவந்திகாவின் இந்த ஆரவ், இந்த அற்புதம், இந்த ஆனந்தம்! மகாகலின் இந்த மகிமை, இந்த மகத்துவம்! 'மஹாகால லோக்'கில் உலகியல் எதுவும் இல்லை என்று கூறினார்.

ஜோதிடத்தில் கணித்தபடி,  உஜ்ஜயினி இந்தியாவின் மையமாக மட்டுமல்லாமல், ஆன்மாவின் மையமாகவும் உள்ளது என்று பிரதமர் கூறினார். உஜ்ஜயினி என்பது ஏழு புனித புரிகளில் ஒன்றாகக் கருதப்படும் நகரம் மற்றும் பகவான் கிருஷ்ணரே கல்வி கற்க வந்த இடமாகும் என்று தெரிவித்தார்.   “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் செல்வம் மற்றும் செழிப்பு, அறிவு மற்றும் கண்ணியம், நாகரிகம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் உஜ்ஜைனி  முன்னணியாக திகழ்ந்தது.

"வெற்றியின் உச்சத்தை அடைய, நாடு அதன் கலாச்சார உயரங்களைத் தொட்டு, அதன் அடையாளத்துடன் பெருமையுடன் இருப்பது அவசியம்" என்று பிரதமர் விளக்கினார். விடுதலை அமிர்த காலத்தில் இந்தியா "அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை" மற்றும் "நமது பாரம்பரியத்தில் பெருமை" போன்றவைகளுக்கு  அழைப்பு விடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்  சோம்நாத்தில் வளர்ச்சிப் பணிகள் புதிய சாதனைகளை படைத்து வருவதாக கூறிய அவர், உத்தரகாண்டில் உள்ள பாபா கேதாரின் ஆசியுடன் கேதார்நாத்-பத்ரிநாத் யாத்திரை பகுதியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

 ஜோதிர்லிங்கங்களின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்தை பிரதமர் விளக்கினார்.   “நமது ஜோதிர்லிங்கங்களின் இந்த வளர்ச்சி இந்தியாவின் ஆன்மீக ஒளியின் வளர்ச்சி, இந்தியாவின் அறிவு மற்றும் தத்துவத்தின் வளர்ச்சி என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.     தெற்கு நோக்கியிருக்கும் ஒரே ஜோதிர்லிங்க பகவான் மஹாகால் என்றும், பாஸ்ம ஆரத்தி உலகம் முழுவதும் பிரபலமான சிவனின் வடிவங்கள் என்றும் பிரதமர் விளக்கினார்.

நாட்டின் ஆன்மீகத்தின் பங்கைப் பற்றி மேலும் விவரித்த திரு மோடி, “இது நமது நாகரிகத்தின் ஆன்மீக நம்பிக்கையாகும், இதன் காரணமாக இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாமல் உள்ளது. நமது நம்பிக்கையின் இந்த மையங்கள் விழித்திருக்கும் வரை, இந்தியாவின் உணர்வு விழித்திருக்கும், இந்தியாவின் ஆன்மா விழித்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

வரலாற்றை நினைவு கூர்ந்த பிரதமர், உஜ்ஜயினியின் ஆற்றலை அழிக்க முயற்சி செய்த இல்துமிஷ் போன்ற படையெடுப்பாளர்களைப் பற்றி பேசினார். கடந்த காலங்களில் இந்தியாவை சுரண்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் மோடி நினைவு கூர்ந்தார்.

ஆன்மிகம் மற்றும் கல்வி குறித்து பேசிய பிரதமர், காசி போன்ற ஆன்மீக மையங்கள் மதத்துடன் அறிவு, தத்துவம் மற்றும் கலையின் தலைநகராகவும், உஜ்ஜயினி போன்ற இடங்கள் வானியல் தொடர்பான ஆராய்ச்சி மையங்களாகவும் இருந்ததை சுட்டிக்காட்டினார். "இன்று நாம் வானியல் துறையில் உலகின் பெரிய சக்திகளுக்கு சமமாக நிற்கிறோம்." என்றும் சந்திரயான் மற்றும் ககன்யான் போன்ற இந்தியாவின் விண்வெளிப் பயணங்களை பிரதமர் சுட்டி காட்டினார்.  “பாதுகாப்புத் துறையில், இந்தியா முழு பலத்துடன் தன்னிறைவை நோக்கி நகர்கிறது என்றும், விளையாட்டு முதல் ஸ்டார்ட்அப் வரை இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

"புதுமை கண்டுபிடிப்புகள் இருக்கும் இடங்களில் புதுப்பித்தல் இருக்கும்" என்று பிரதமர் கூறினார். அடிமைத்தனத்தின் ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், “இந்தியா தனது பெருமை, கெளரவம் மற்றும் மரபு சார்ந்த இடங்களை புதுப்பித்து அதன் பெருமையை மீட்டெடுக்கிறது”  

 முன்னதாக, உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகல் லோக்கில் மஹாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், சத்தீஸ்கர் ஆளுநர் திருமதி அனுசுயா உய்கே, ஜார்கண்ட் ஆளுநர் திரு ரமேஷ் பெயின்ஸ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர், திரு டாக்டர் வீரேந்திர குமார், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர்கள், திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் திரு பிரஹலாத் படேல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

**************

(Release ID:1866941)

IR/AG/SRI/RR


(Release ID: 1867038) Visitor Counter : 173