சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையேயான புதிய ஒப்பந்தத்தின் மூலம் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது

Posted On: 24 AUG 2022 1:13PM by PIB Chennai

      தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையேயான புதிய ஒப்பந்தத்தின் மூலம் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. புதுதில்லியில் இதற்கான ஒப்பந்தத்தில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர் எஸ் ஷர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ஆர் சுப்பிரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  இந்நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

     இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து சுகாதார பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார். திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்தும் உத்தேசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

     பின்னர் பேசிய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காக கல்வி, கண்ணியத்துடன் வாழ்தல், சுகாதார உதவி, வாழ்வாதாரம் மற்றும் திறன்மேம்பாட்டிற்கான வாய்ப்புகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854076

***************



(Release ID: 1854122) Visitor Counter : 226