பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் நினைவுகூர்ந்தார்

प्रविष्टि तिथि: 15 AUG 2022 3:52PM by PIB Chennai

ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சிறந்த அறிவாளியான ஸ்ரீஅரவிந்தர், நமது நாட்டைப் பற்றி தெளிவான பார்வை கொண்டிருந்தார். கல்வி, அறிவுசார் திறன், துணிச்சல் ஆகியவற்றை கொண்ட அவர், நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறார் என்று பிரதமர் கூறியுள்ளார்.  

 இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 “இன்று ஸ்ரீஅரவிந்தரின் ஜெயந்தி. புத்திகூர்மையுடன் அவர் நமது நாட்டைப்பற்றி தெளிவான பார்வையை கொண்டிருந்தார். அவருடைய கல்வி, அறிவுசார் திறன், துணிச்சல் ஆகியவற்றுடன் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறார்.  புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் அவருடன் தொடர்புள்ள இடங்களுக்கு நான் மேற்கொண்ட பயணம்  குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன்.”

“மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில், தன்னிறைவு மற்றும் கற்றல் தொடர்பான ஸ்ரீஅரவிந்தரின் சிந்தனைகள் பற்றி நான் எடுத்துரைத்துள்ளேன்.”

***************


(रिलीज़ आईडी: 1852084) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam