பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரம் அடைந்ததை வெளியிட்ட 75 ஆண்டு பழமை வாய்ந்த பத்திரிக்கையை போற்றி பாதுகாத்த டாக்டர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 14 AUG 2022 10:18PM by PIB Chennai

சுதந்திரம் அடைந்ததை வெளியிட்ட 75 ஆண்டு பழமை வாய்ந்த பத்திரிக்கையை ட்விட்டர் பதிவில் காட்சிப்படுத்திய டாக்டர் ஹெச்.வி. ஹண்டேவின் ஆர்வத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். டாக்டர் ஹெச்.வி. ஹண்டே போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் தேச கட்டமைப்பிற்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்திருப்பதாக பிரதமர் கூறினார்.

விடுதலையின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு டாக்டர் ஹெச்.வி. ஹண்டே வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

“டாக்டர் ஹெச்.வி. ஹண்டே போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் தேச கட்டமைப்பிற்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார்கள். அவரது ஆர்வத்தையும், மன உறுதியையும் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. @DrHVHande1” 

                                                     ***************


(வெளியீட்டு அடையாள எண்: 1852017) வருகையாளர் எண்ணிக்கை : 175