பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் வாழ்த்து

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற 4-வது பதக்கம், அவருடைய திறன் மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது : பிரதமர்

Posted On: 08 AUG 2022 8:25AM by PIB Chennai

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஸ்ரீகாந்த் கிடாம்பி காமன்வெல்த் போட்டியில் 4-வது பதக்கம் வென்றது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ; “உறுதிமிக்க  இந்திய பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் கிடாம்பி காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற 4-வது பதக்கம்  அவருடைய திறன் மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.  அவருக்கு என்னுடைய வாழ்த்து. வளரும் வீரர்களுக்கு அவர் உத்வேகம் அளித்து, இந்தியாவை பெருமையடைய செய்யட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1849603)


(Release ID: 1849653) Visitor Counter : 139