பிரதமர் அலுவலகம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி-2022 இல் 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அன்ஷு மாலிக்குக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 05 AUG 2022 11:02PM by PIB Chennai

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அன்ஷு மாலிக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 

“மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அன்ஷு மாலிக்கிற்கு,  அவரது பிறந்தநாளில் வாழ்த்துக்கள். அவரது விளையாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விளையாட்டு மீதான அவரது ஆர்வம் வரவிருக்கும் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது’’ .

***************



(Release ID: 1849084) Visitor Counter : 108