பிரதமர் அலுவலகம்
பெங்களூரூவில் பாஸ்க் நவீன வளாக திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
प्रविष्टि तिथि:
30 JUN 2022 12:55PM by PIB Chennai
பாஸ்க் இந்தியா குழுவின் அனைத்து உறுப்பினர்களே,
நண்பர்களே, நமஸ்தே!
100 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் பாஸ்க் இந்தியா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு இந்தியாவுக்கும், பாஸ்க் இந்தியாவுக்கும், சிறப்புமிக்க ஆண்டாகும். நம் நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.
இந்தியா மற்றும் உலகிற்கு, எதிர்காலத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் இந்த வளாகம் நிச்சயம் முன்னணியில் இருக்கும். அக்டோபர் 2015-ல், அப்போதைய ஜெர்மன் பிரதமர் மெர்க்கலுடன் நானும் பெங்களூரூவில் உள்ள பாஸ்க் வளாகத்தை பார்வையிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி ஏற்படுத்த பாஸ்க் இந்தியா பயன்படுத்தும் இரட்டை கல்விமுறை, சமமான மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.
நண்பர்களே,
தற்காலம், தொழில்நுட்ப யுகம். இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய பெருந்தொற்றை எதிர்த்து உலகம் போராடி வரும் வேளையில்,தொழில்நுட்பத்தின் பலன்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். எனவே, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் இன்னும் அதிகளவில் முதலீடு செய்வது அவசியம். பாஸ்க் இந்தியா நிறுவனம் புதுமை கண்டுபிடிப்பு பணிகளில் மட்டுமின்றி, அதனை உரிய அளவில் மேற்கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த செயல்பாட்டில் முக்கிய அம்சமே, நீடித்து மேற்கொள்ளப்படவேண்டியது தான். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் நிறுவப்பட்ட சூரிய சக்தி உற்பத்தி திறன் ஏறத்தாழ 20 மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி பசுமையாக மாறிவருகிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கார்பன் சமநிலையை அடைவதில் பாஸ்க் நிறுவனம் சாதனை படைத்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இது மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
நண்பர்களே,
இந்தியா தற்போது வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. நமது இளைஞர்களின் முயற்சிக்கு நன்றி கூறும் விதமாக, நமது ஸ்டார்ட்-அப் சூழல் உலகிலேயே மிகப்பெரிய சூழல்களில் ஒன்றாக உள்ளது. தொழில்நுட்ப உலகில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள இணைப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா குறித்த நமது தொலைநோக்கு, அரசின் அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதாகும். உலகநாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.
நண்பர்களே,
சாதனைகள் என்பது முக்கியமானது. அவை கொண்டாடுவதற்கும், முன்னோக்கி பார்ப்பதற்கும் உரிய தருணமாகும். இந்த தருணத்தில் பாஸ்க் நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் உங்களது குழு என்ன செய்யப்போகிறது என்பதற்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்க் நிறுவனம், ஜெர்மனி நிறுவனமாக இந்தியாவிற்கு வந்தது. ஆனால் தற்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் எப்படி உள்ளதோ அதே போன்று இந்திய நிறுவனமாக மாறியுள்ளது. ஜெர்மன் பொறியியல் மற்றும் இந்திய ஆற்றலுக்கு இதுவே சிறந்த உதாரணம். இந்த ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்து தொடரும். பாஸ்க் இந்தியா குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மீண்டும் ஒருமுறை பாராட்டி உங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
நன்றி,
மிக்கநன்றி!.
***************
(रिलीज़ आईडी: 1838208)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam