பிரதமர் அலுவலகம்
ஜெர்மனியின் முனிச் நகரில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
26 JUN 2022 10:45PM by PIB Chennai
வணக்கம்!
எப்படி இருக்கிறீர்கள்!
உங்களில் பலர் நீண்ட தூரத்தில் இருந்து பயணம் செய்து இங்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் கூறுகிறேன். இந்தியாவின் கலாச்சாரம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை உங்கள் அனைவரிடமும் என்னால் பார்க்க முடிகிறது. இந்த அன்பை என்னால் மறக்க முடியாது. உங்கள் அன்பு, ஆர்வம், உற்சாகத்தை செய்திகளில் பார்த்து இந்திய மக்கள் மிகவும் பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இந்த நாள் மற்றொரு காரணத்திற்காகவும் அறியப்படுகிறது. இன்று ஜூன் 26. ஒவ்வொரு இந்தியனின் டிஎன்ஏவில் இடம்பிடித்திருக்கும் நமது பெருமையான ஜனநாயகத்தை பணயக்கைதியாக வைத்து நசுக்க 47 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எமர்ஜென்சி காலம் இந்தியாவின் துடிப்பான ஜனநாயக வரலாற்றில் ஒரு இருண்ட புள்ளி போன்றது.
ஜனநாயகத்தை அழிக்கக்கூடிய அனைத்து சதிகளையும் இந்திய மக்கள் ஜனநாயக வழியிலேயே பதில் அளித்தனர். இந்தியர்கள் நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது ஜனநாயகத்தில் பெருமை கொள்கிறோம்.
இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் திறந்தவெளி இல்லாத கழிப்பிடமாக மாறியுள்ளது. இன்று இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதியுள்ளது. இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் 99%க்கும் அதிகமான மக்கள் சமையலுக்கு எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வங்கித்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவின் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை இந்தியா உறுதி செய்துள்ளது. மேலும், இந்தியாவில் பத்து நாட்களுக்கு ஒருமுறை சராசரியாக ஒரு யூனிகார்ன் உருவாகிறது. இன்று ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5,000 காப்புரிமைகள் இந்தியாவில் தாக்கல் செய்யப்படுகின்றன. இன்று ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500க்கும் மேற்பட்ட நவீன ரயில் பெட்டிகளை இந்தியா தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 18 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நண்பர்களே,
கடந்த வரும் 111 பில்லியன் டாலர் மதிப்பிலான பொறியியல் சரக்குகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. பருத்தி மற்றும் கைத்தறி பொருட்களின் ஏற்றுமதியும் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தியை அதிகரிக்க, 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அந்நிய நேரடி முதலீடும் புதிய சாதனை படைத்துள்ளது.
நண்பர்களே,
2014-ம் ஆண்டுவரை இந்தியாவில் திறந்தவெளி கழிப்பறை என்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் தற்போது 10 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகளை கட்டியுள்ளோம். இந்திய மக்கள் தங்களுடைய பணம் நேர்மையாக செலவிடப்படுகிறது என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.
நண்பர்களே,
இந்தியாவின் வெற்றிக்கு நீங்கள் தூதர்களாக விளங்குவதுடன், நீங்களும் ஒரு இந்தியாவின் வெற்றிக்கதை என்று கூறுகிறேன்.
நண்பர்களே!
உங்களுடைய அன்பு மற்றும் ஆசிர்வாதத்திற்கும் இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காகவும் நான் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
பாரத் மாதாகி ஜெய்!
பாரத் மாதாகி ஜெய்!
பாரத் மாதாகி ஜெய்!
***************
(Release ID: 1837315)
(Release ID: 1837859)
Visitor Counter : 162
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam