பிரதமர் அலுவலகம்
75-வது ஆண்டு சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திரதின அமிர்தப் பெருவிழா கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
28 JUN 2022 8:08PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 75-வது ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை ஜூன் 27 முதல் தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடியது. இதன்ஒரு பகுதியாக, புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கதுறை அமைச்சகத்தின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டப் பிரிவு, 28 ஜூன் 2022 அன்று, புதுதில்லியிலுள்ள முனிசிபல் கவுன்சிலின் மாநாட்டு மைய அரங்கில் அரைநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் திரு. ராவ் இந்தர்ஜித் சிங் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் சொத்துக்களை மேம்படுத்துவதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள், நாடகம் மற்றும் குறும்படம் மூலம் விளக்கப்பட்டது.
***************
(रिलीज़ आईडी: 1837832)
आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam