பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

14வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 21 JUN 2022 3:00PM by PIB Chennai

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2022 ஜூன் 23-24 அன்று காணொலி வாயிலாக சீனா நடத்தும் 14-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜூன் 24 அன்று விருந்தினர் நாடுகளுடன் நடைபெறவுள்ள உலகளாவிய வளர்ச்சிக்கான உயர்மட்ட உரையாடலும் இதில் அடங்கும்.

2. அனைத்து வளரும் நாடுகளுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகளை குறித்து விவாதிப்பதற்கும் உரையாடுவதற்குமான ஒரு தளமாக பிரிக்ஸ் அமைந்துள்ளது. பலதரப்பு அமைப்பைச் சீர்திருத்தம் செய்து அதை அதிக பிரதிநிதித்துவம் மற்றும் உள்ளடக்கியதாக மாற்ற பிரிக்ஸ் நாடுகள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

3. 14-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நடைபெறும் விவாதத்தின் போது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள், வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல் – தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், விவசாயம், தொழில்நுட்பம் - தொழிற்கல்வி மற்றும் பயிற்சி, குறு – சிறு- நடுத்தர தொழில்கள் போன்ற துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலதரப்பு அமைப்பின் சீர்திருத்தம், கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் உலகளாவிய பொருளாதார மீட்பு போன்ற பிரச்சினைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெறலாம்.

4. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, 22 ஜூன் 2022 அன்று பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் தொடக்க விழாவில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளிப்பதிவு மூலம் பிரதமர் முக்கிய உரையாற்றுவார்.

***************

(Release ID: 1836265)


(Release ID: 1836393) Visitor Counter : 540