பிரதமர் அலுவலகம்

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்கள் விடுவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 30 MAY 2022 12:59PM by PIB Chennai

வணக்கம்!!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி அவர்களே,  நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைச்சரவை சகாக்களே, அவர்களுடன் பங்கேற்றிருக்கும் மூத்த குடிமக்களே, இன்று யாருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த சிறப்புக்குரிய எனதருமை  சிறார்களே, மதிப்பிற்குரிய அனைத்து முதலமைச்சர்களே, இதர பிரமுகர்களே, அன்பிற்குரிய நாட்டு மக்களே!

இன்று ஒரு பிரதமராக உங்களிடம் நான் பேசவில்லை. உங்கள் குடும்பத்தின் உறுப்பினராக பேசுகிறேன். இன்று சிறார்களிடையே, நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நண்பர்களே,

வாழ்க்கை சில நேரங்களில், நமக்கு எதிர்பாராத நிலைமைகளை ஏற்படுத்திவிடுகிறது. திடீரென  இருள்   இறங்கி வருகிறது. நமது மகிழ்ச்சியான  வாழ்க்கையில் அனைத்தும் மாறிவிடுகின்றன. ஏராளமானவர்களின் வாழ்க்கையில், இத்தகைய நிலைமைய  கொரோனா ஏற்படுத்திவிட்டது. கொரோனா காரணமாக உறவினர்களை இழந்தவர்களின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு நாளின் போராட்டத்தையும், ஒவ்வொரு கணத்தின் போராட்டத்தையும், புதிய சவால்களையும்,  ஒவ்வொரு நாளின் சிரமங்களையும், நான் அறிவேன். இந்த நிகழ்ச்சி யாருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அந்த சிறார்களின் வலியை வார்த்தைகளால் கூறுவது சிரமமானது.  நம்மைவிட்டு  பிரிந்தவர்கள்  ஒரு சில நினைவுகளை மட்டும் நம்மோடு விட்டுவிட்டு செல்கிறார்கள். ஆனால், வாழ்கின்றவர்கள், பலவகையான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய சவாலான தருணங்களை பெற்றோர்களை இழந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறார்களின் கஷ்டங்களை தணிப்பதற்கான  சிறிய முயற்சியே குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ்.

நண்பர்களே,

முறையான இடையூறு இல்லாத கல்விக்காக இவர்களின், வீடுகளுக்கு அருகே உள்ள  அரசு அல்லது தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து நான் திருப்தி அடைந்துள்ளேன். இவர்களின் புத்தகங்கள், சீருடைகள், போன்றவற்றுக்கான செலவை பிஎம் கேர்ஸ் ஏற்கும்.  இவர்களில் ஒருசிலர்,  தொழில்முறை படிப்புகளிலோ, அல்லது உயர்கல்வியிலோ சேர்வதற்கு கல்விக் கடன் தேவைப்பட்டால் அதற்கும் பிஎம் கேர்ஸ், உதவும்.   மற்ற பிற திட்டங்களின் மூலம், அன்றாத தேவைகளுக்கும் மாதந்தோறும் ரூ.4,000 ஏற்பாடு செய்யப்படும்.

நண்பர்களே,

இத்தகைய குழந்தைகளின் பள்ளிப் படிப்பு நிறைவடையும்போது, அவர்களின் எதிர்கால கனவுகளுக்கு கூடுதலாக பணம் தேவைப்படும். இதற்காக, 18 முதல் 23 வயதுள்ள இளையோர் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகை பெறுவார்கள்.  இவர்களுக்கு 23 வயது நிறையும்போது பத்து லட்சம் ரூபாயும், பெறுவார்கள்.

நண்பர்களே,

மற்றொரு முக்கியமான கவலை என்பது சுகாதாரம் தொடர்புடையது. எந்தவொரு நோய்க்கான சிகிச்சைக்கும் பணம் தேவைப்படுகிறது. ஆனால், இதற்காக சிறார்களோ, அல்லது அவர்களின் பாதுகாவலர்களோ, கவலைப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கன பிஎம் கேர்ஸ், மூலம்  உங்களுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டையும் வழங்கப்படும். இந்த அட்டையின் மூலம், ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சையை நீங்கள் பெறலாம்.

நண்பர்களே,

இந்த முயற்சிகளுக்கு இடையே சிறார்களுக்கு  உணர்வுபூர்வமான ஆதரவும், மன ரீதியான வழிகாட்டலும் தேவைப்படும் என்பதை நாங்கள் அறிவோம். குடும்பத்தில் முதியவர்கள் உள்ள போதும், அரசும், இதற்கான முயற்சியை மேற்கொள்கிறது. இது தொடர்பாக சிறப்பான  ‘சம்வாத்’ சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. ‘சம்வாத் உதவி எண்ணில்’ உளவியல் சார்ந்த விஷயங்கள் குறித்து நிபுணர்களுடன் சிறார்கள் கலந்தாலோசிக்கலாம், விவாதிக்கலாம். 

நண்பர்களே,

சிறார்கள் மற்றும், இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும், துணிவோடும், மனிதகுல உணர்வோடும், இந்த நாட்டுக்கும், உலகிற்கும் நீங்கள் வழிகாட்ட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு தீர்மானத்துடனும், அதற்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தயாரிப்புடனும் நீங்கள் முன்னேறிச் செல்லும் போது நிச்சயமாக உங்களின் கனவுகள் நனவாகும். எங்கே செல்ல நீங்கள் விரும்பினாலும் உங்களைத் தடுத்து நிறுத்த உலகில் எந்த சக்தியும் இல்லை. பொறுமையை, உங்களுக்குள் உறுதியை, தீர்மானத்தை நிறைவேற்றும் ஆற்றலை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் எங்கேயும் நிற்க வேண்டிய அவசியமில்லை.  தொடக்கத்தில் நான் கூறியது போல, உங்கள் குடும்ப உறுப்பினராக பேசுகிறேன். ஒரு குடும்ப உறுப்பினராக உங்களை நான் வாழ்த்துகிறேன். உங்களை வாழ்த்துவதற்கு உரிமையை பெற்றிருக்கிறேனா இல்லையா என்பதை நான் அறியேன். ஆனால் உங்களுக்குள் ஆற்றல் இருப்பதை நான் காண்கிறேன். எனவே, உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நீங்கள் நெடுந்தூரம் பயணிக்கவும் சிறப்படையவும் நான் வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி!

------



(Release ID: 1829570) Visitor Counter : 189