பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யுபிஐ மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை ஒலி வடிவத்தில் விளக்கும் ஐஐபிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 13 APR 2022 2:01PM by PIB Chennai

டிஜிட்டல் பணப் பரிமாற்றம், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக செயலி (யுபிஐ) ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை ஒலி வடிவத்தில் வெளிப்படுத்தியதற்காக ஐஐபி அமைப்பை  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஐஐபி-யின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

"யுபிஐ மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பற்றி நான் அடிக்கடி பேசியிருக்கிறேன். ஆனால், தரவு ஒலிமுறை மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை நீங்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மிகவும் சுவாரஸ்யமான, ஈர்க்கக்கூடிய, வெளிப்படையான தகவல் இது.

***************


(Release ID: 1816409)