பிரதமர் அலுவலகம்

கூட்டறிக்கை: இந்தியா-ஆஸ்திரேலியா காணொலி உச்சி மாநாடு

Posted On: 21 MAR 2022 7:00PM by PIB Chennai

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு ஆஸ்திரேலியப் பிரதமர் திரு ஸ்காட் மாரிசன் ஆகியோர் 21 மார்ச் 2022 அன்று 2-வது இந்தியா-ஆஸ்திரேலியா காணொலி உச்சி மாநாட்டை நடத்தினர்.  

இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான கூட்டுக்கு தங்கள் உறுதியை தலைவர்கள் மீண்டும் வெளிப்படுத்தினர். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, இணையம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றனர். நம்பிக்கை, புரிதல், பொதுவான நலன்கள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் பகிரப்பட்ட விழுமியங்களின் வலுவான அடித்தளத்தில் இருதரப்பு உறவுகள் செழித்துள்ளன என்பதை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினார்கள். நெருக்கமான ஒத்துழைப்பிற்காக வருடாந்திர உச்சி மாநாடுகளை நடத்துவதற்கு அவர்கள் உறுதியளித்தனர். 

இந்தியாவின் 2023 ஜி20 தலைமையை எதிர்நோக்கிய தலைவர்கள், உலகளாவிய நலன்கள் மற்றும் பொருளாதார விஷயங்களில் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். 

பொருளாதார உறவை ஆழப்படுத்த தலைவர்கள் உறுதிபூண்டனர். ஆஸ்திரேலியா-இந்தியா உள்கட்டமைப்பு மன்றத்தின் திறப்பு , பெங்களூருவில் புதிய துணைத் தூதரகத்தைத் திறப்பதற்கான ஆஸ்திரேலியாவின் எண்ணம், எதிர்காலத் திறன்கள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு, இருவழி வர்த்தகம் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றத்தைத் தலைவர்கள் வரவேற்றனர். இறுதிக்கட்டத்திற்கு நெருங்கி உள்ள பல விஷயங்களில் பெரிய அளவில் ஒன்றிணைந்ததில் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். சுற்றுலா ஒத்துழைப்புக்கான இந்தியா-ஆஸ்திரேலியா புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதையும் தலைவர்கள் வரவேற்றனர். 

இந்தியா ஆஸ்திரேலியா இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய நிறுவனங்களின் கடல்வழி வருமானத்தின் மீதான வரிவிதிப்பு பிரச்சினைக்கு, முன்கூட்டியே தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.

சுதந்திரமான, நியாயமான, உள்ளடக்கிய மற்றும் விதிகள் சார்ந்த வர்த்தக சூழலுக்கான தங்கள் உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். உலக வர்த்தக அமைப்பின் மையமாக  உள்ள விதிகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக அமைப்பை நிலைநிறுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் அவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கும், வலுப்படுத்துவதற்கும், பல்வகைப்படுத்துவதற்கும், விநியோகச் சங்கிலித் தடங்கல்களைத் தவிர்ப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். 

இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஆழத்தைத் தலைவர்கள் அங்கீகரித்தனர். பருவநிலை மாற்றம், எரிசக்தி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், குவாட், ஜி20, யுஎன்எஃப்சிசிசி மற்றும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி  ஆகியவற்றில் தலைவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினர்.  

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808418



(Release ID: 1810007) Visitor Counter : 143