பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது குடிமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இன்று முக்கியமான நாளாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்

12-14 வயது பிரிவு இளையோரையும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளார்

Posted On: 16 MAR 2022 10:12AM by PIB Chennai

நமது குடிமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இன்று முக்கியமான நாளாகும் என்று கூறியுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி,  12-14 வயது பிரிவு இளையோரையும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“நமது குடிமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்தியாவின் முயற்சிகளில் இன்று முக்கியமான நாளாகும். தற்போது 12-14 வயது பிரிவு இளையோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்ளவும் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இந்த வயது பிரிவினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நான் வலியுறுத்துகிறேன்.”

“ஒட்டு மொத்த கோளினையும் பாதுகாக்கும் இந்தியாவின் நெறிமுறை அடிப்படையில் தடுப்பூசி தோழமை திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசிகளை அனுப்பியிருக்கிறோம். இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் கொவிட்-19-க்கு எதிராக உலகளவில் வலுவான போராட்டத்தை உருவாக்கியுள்ளன.” “தற்போது ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ பல தடுப்பூசிகளை இந்தியா கொண்டுள்ளது. உரிய பரிசோதனைக்குப் பின் மற்ற தடுப்பூசிகளுக்கும் நாம் அனுமதி வழங்கியிருக்கிறோம். இந்த உயிர்க்கொல்லி பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் நல்ல  நிலையில் நாம் இருக்கிறோம். அதே சமயம் கொவிட் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டியுள்ளது.”

 

***


(Release ID: 1806472) Visitor Counter : 229