நிதி அமைச்சகம்

முன்மாதிரி மாற்றத்திற்காக நகர்ப்புற வளர்ச்சியை செம்மைப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய நிதிநிலை அறிக்கை பரிந்துரை

Posted On: 01 FEB 2022 1:17PM by PIB Chennai

முன்மாதிரி மாற்றத்திற்காக நகர்ப்புற வளர்ச்சியை செம்மைப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய நிதிநிலை அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. புகழ்பெற்ற நகர்ப்புற திட்டமிடுபவர்கள், நகர்ப்புற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை கொண்ட இந்த குழு  நகர்ப்புறத் துறை கொள்கைகள், திறன் மேம்பாடு, திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் பரிந்துரைகளை வழங்கும். இதனை மத்திய பட்ஜெட் 2022-23- நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.

அவர் கூறுகையில், நகர்ப்புற திட்டமிடல் வணிக-வழக்க அணுகுமுறையுடன் தொடர முடியாது, ஏனெனில் இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டை அடையும் நேரத்தில், நமது மக்கள்தொகையில் பாதி பேர் நகர்ப்புறங்களில் வசிக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தயாராவதற்கு, திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சி மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நகரங்களை பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் வாய்ப்புகள் அளிக்கக்கூடிய மற்றும் நிலையான வாழ்க்கை உள்ள மையங்களாக மாற்ற வேண்டும் என்று நிதி அமைச்சர் கூறினார்.



(Release ID: 1794264) Visitor Counter : 249