பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்

Posted On: 23 DEC 2021 5:13PM by PIB Chennai

ஹர ஹர மகாதேவ்! திரிலோச்சன் மகாதேவ போற்றி! மாதா ஷீத்லா சௌக்கியா தேவி போற்றி! உத்திரப்பிரதேசத்தின் ஆற்றல் மிக்க முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகா டாக்டர் மகேந்திரநாத் பாண்டே அவர்களே, உ.பி. அரசின் அமைச்சர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் திரளாக இங்கு வந்துள்ள என் அன்பான விவசாய சகோதர சகோதரிகளே!

வாரணாசி மக்களுக்கு வணக்கம்! அண்டை மாவட்டமான ஜான்பூரின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்! இன்று,  விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான பெரிய திட்டங்களுக்கு முழு வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சாட்சியாக மாறியுள்ளன. நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று என்பதால் இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. அவருக்கு எனது மரியாதை மிகுந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது பிறந்த நாள் நினைவாக நாடு முழுவதும் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பசுக்கள் பற்றி பேசுவது  சிலருக்கு குற்றமாக இருக்கலாம். பசுக்கள் நம்மால் தாயாக மதிக்கப்படுகின்றன.  எருமைகளைப் பரிகாசம் செய்கின்றவர்கள், அவை போன்ற கால்நடைப் பராமரிப்பு மூலம் நாட்டின் 8 கோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். 

இந்தியாவின் பால்வளத்துறையை வலுப்படுத்துவது எமது அரசின் உயர் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக பனாஸ் காசி தொகுப்புக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. 

6-7 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் பால் உற்பத்தி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் 22 சதவீதம் இன்று இந்தியாவில் உற்பத்தியாகிறது. உத்தரப்பிரதேசம் இன்று நாட்டில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மட்டுமின்றி பால் வளத்துறை விரிவாக்கத்திலும் கணிசமான அளவு முன்னேறி உள்ளது.

குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784594

******

 

 


(Release ID: 1791198) Visitor Counter : 279