பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் செவ்வாய்க்கிழமை 28 டிசம்பர் 2021 அன்று உரையாற்றுகிறார்


பிரதமரின் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஐஐடி கான்பூர், பிற ஐஐடி-க்களின் மாணவர்கள், முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்

Posted On: 22 DEC 2021 10:17AM by PIB Chennai

ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை 28 டிசம்பர் 2021 அன்று உரையாற்றுகிறார். தமது உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஐஐடி கான்பூர், பிற ஐஐடி-க்களின் மாணவர்கள் மற்றும் உலகெங்கும் பரவியுள்ள ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களை திரு.மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதற்காக இம்மாதம் 28-ந் தேதி @IITKanpur  வருவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இதுவொரு வலிமையான நிறுவனம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் பங்களிப்பு வழங்குவதில் முன்னோடியாக உள்ள நிறுவனம்.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அனைவருக்கும் நான் அழைப்பு விடுகிறேன்.

***


(Release ID: 1784109) Visitor Counter : 257