பிரதமர் அலுவலகம்
பிரிட்டனின் ராயல் கோல்டு விருது-2022 பெறவுள்ள புகழ்பெற்ற சிற்பி திரு. பாலகிருஷ்ண தோஷிக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 DEC 2021 2:18PM by PIB Chennai
பிரிட்டனின் ராயல் கோல்டு விருது-2022 பெறவுள்ள புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர் சிற்பி திரு. பாலகிருஷ்ண தோஷிவுடன் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர் சிற்பி திரு. பாலகிருஷ்ண தோஷியிடம் பேசியதோடு பிரிட்டனின் ராயல் கோல்டு விருது-2022 பெறவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். கட்டடக்கலை உலகிற்கு அவரது பங்களிப்புகள் மிகமுக்கியமானதாகும். படைப்பாற்றல், தனித்துவம், பன்முகத்தன்மை ஆகியவற்றால் அவரது பணிகள் உலகளவில் போற்றப்படுகின்றன," எனக் குறிப்பிட்டுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1780078)
வருகையாளர் எண்ணிக்கை : 243
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam