பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்குப் பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் முதலாவது தவணையைப் பிரதமர் மோடி பரிமாற்றம் செய்தார்


"பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டுள்ள முதலாவது தவணை திரிபுராவின் கனவுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும்"



"திரிபுராவின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு முழு சக்தியோடும் நேர்மையோடும் ஈடுபட்டுள்ளது"



"தேவையற்ற சட்டங்கள் குடிமக்களின் நலனுக்குத்  தடைகளாக இருப்பதை அனுமதிக்க முடியாது"



"ஏற்கெனவே நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து நமது ஆறுகள் கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன, ஆனால் கங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்  இங்கே வருவதற்கு முன் தடுக்கப்பட்டுவிட்டது"



"நாட்டின் இன்றைய வளர்ச்சி 'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' என்ற உணர்வுடன் காணப்படுகிறது;  இப்போது வளர்ச்சி என்பது நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாடு என்பதன் இணைவாகக்  கருதப்படுகிறது"



"பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கௌரவ தினமாகக்  கொண்டாடப்படுகிறது.  ஆதிவாசி சமாஜத்தின் பங்களிப்புக்குப் புகழாரம் சூட்டும்  நாளாக மட்டும் இ

Posted On: 14 NOV 2021 2:21PM by PIB Chennai

திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்குப்  பிரதமரின் ஊரக வீட்டு வசதித்  திட்டத்தின் முதலாவது தவணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பரிமாற்றம் செய்தார். இந்த நிகழ்வில் ரூ. 700 கோடிக்கும் அதிகமான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. பிரதமரின் தலையீட்டைத் தொடர்ந்து, திரிபுராவின் தனித்துவமான புவிச்சூழலைக் கருத்தில் கொண்டு, 'கச்சா' வீடு என்பதற்கான விளக்கம் இந்த மாநிலத்திற்கென குறிப்பாக மாற்றியமைக்கப்பட்டது; இதனால் 'கச்சா' வீடுகளில் வாழும் ஏராளமான பயனாளிகள் 'பக்கா' வீடு கட்டுவதற்கு உதவிபெற முடிந்தது. மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திரிபுரா முதலமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

 

தலாய் திரிபுராவின் அனிதா குக்கி தேப்பர்மாவுடன் கலந்துரையாடிய பிரதமர் அவரது வாழ்க்கை பற்றியும், வாழ்வாதாரம் பற்றியும் கேட்டதோடு, விரைவில் வலுவான, சிறப்பான வீடு ஒன்றை கட்டுமாறு கூறினார். விரைவில் பக்கா வீடு ஒன்றை அவர் பெறவிருக்கிறார். இந்த அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழைகள் மற்றும் பழங்குடி மக்களின் நலன் என்பது அதன் உயர் முன்னுரிமையாக இருக்கிறது என்று அவரிடம் பிரதமர் கூறினார். ஏகலைவா பள்ளிகள், வன உற்பத்தித் தொடர்பான திட்டங்கள் போன்றவை திட்டமிடப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. தனது குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக இந்த பயனாளியை அவர் பாராட்டினார்.

 

இந்தத் திட்டத்திலிருந்து பயனடைந்த அனுபவம் பற்றி செப்பாஹிஜாலாவை சேர்ந்த திருமதி சோம மஜும்தாரிடம் பிரதமர் கேட்டார். புதிய பக்கா வீடு கிடைத்தபின் அவரது வாழ்க்கை எவ்வாறு மேம்படும் என்பதையும் பிரதமர் கேட்டறிந்தார். இந்தத் திட்டம் காரணமாக தமது பக்கா வீடு எனும் கனவு நிறைவேறியுள்ளது என்று கூறிய அந்தப் பெண் மழைக்காலத்தில் இது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றார். தவணைத் தொகையை வீடு கட்டுவதற்கு மட்டும் செலவிடுமாறு அவரிடம் பிரதமர் வலியுறுத்தினார். தலையீடோ, இடைத்தரகரோ இல்லாமல் திட்டத்தின் பயன்கள் பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்வது தமது அரசின் நோக்கமாக உள்ளது என்று அவர் கூறினார்.

 

வீடு கட்டுவதற்கு பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தவணைகளில் உதவி பெறுவது பற்றி அறிந்திருக்கிறாரா என வடக்குத் திரிபுராவைச் சேர்ந்த திரு சமீரான் நாத்திடம் பிரதமர் விசாரித்தார்.  இந்த வீடு கட்டுவதற்காக நடத்தப்பட்ட ஆய்வு போன்ற திட்டத்திற்கு முந்தைய செயல்பாடுகளின் அவரது அனுபவம் பற்றியும் பிரதமர் கேட்டறிந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையும்போது ஏதாவது பிரச்சனைகளை எதிர்கொண்டீர்களா அல்லது இந்தப் பயன்களைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தீர்களா என்பதையும் அவரிடம் பிரதமர் கேட்டார். லஞ்சம் கொடுக்காமல் எந்தப் பயனையும் பயனாளிகள் பெற முடியாமல் இருந்த முந்தைய நடைமுறையை பிரதமர் குறைகூறினார்.

 

தெற்கு திரிபுராவைச் சேர்ந்த திருமதி கதார் பையாவுடன் கலந்துரையாடிய பிரதமர் இந்தத் திட்டத்தின் கீழ் தவணைகளாக எவ்வளவு பெறுவீர்கள் என்பது பற்றி தெரியுமா என கேட்டார். அவர் விரும்பிய வகையில் அவர் விரும்பிய வீட்டை கட்டுவதற்கு அரசு நிதியுதவி செய்யும் என்று எப்போதாவது கனவு கண்டதுண்டா என்றும் பிரதமர் கேட்டார். இவர்களின் வாழ்க்கையில் பக்கா வீடு மகிழ்ச்சியை  கொண்டு வரும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். எந்தவித பாகுபாடு இல்லாமலும், இடைத்தரகர் இல்லாமலும் பயன்களை அரசு உறுதி செய்கிறது என்பதற்கு திருமதி பையா போன்ற பயனாளிகள் நிரூபணம் என்றும் அவர் கூறினார். குடிமக்கள் பயனடையும் அணுகுமுறையுடன் அரசு பணி புரிந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். விரைவாக பணியாற்றும் முதலமைச்சருக்கும், அவரது அணியினருக்கும் பிரதமர் பராட்டு தெரிவித்தார். பிப்ளப் குமார் தேவ் அவர்களின் அரசாக இருந்தாலும், மோடி அரசாக இருந்தாலும் குடிமக்களின் நலனுக்கு தடைகளாக இருக்கும் சட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். இயன்றவரை பிரதமரின் வீட்டு வசதி திட்டப்படியான வீடுகள் பெண்களின் பெயரில் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் இன்றைய நிகழ்வு  திரிபுராவிற்கு வரவிருக்கும் மகத்தான நாட்களுக்கும் நம்பிக்கைக்கும் அறிகுறியாகும் என்றார். மாநிலத்தில் உள்ள பிப்ளப் தேப் அரசும் மத்தியில் உள்ள அரசும் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல உறுதிபூன்டுள்ளன என்பதை அவர் திட்டவட்டமாக அறிவித்தார். “பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டுள்ள முதலாவது தவணை திரிபுராவின் கனவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். திரிபுராவின் அனைத்து மக்களையும், முதல் தவணை பயன்பெற்றுள்ள சுமார் ஒன்றரை லட்சம் குடும்பங்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று திரு மோடி கூறினார்.

 

திரிபுராவில் ஏழ்மையை நீடிக்கச் செய்வது, அடிப்படை வசதிகளிலிருந்து திரிபுரா மக்களை விலக்கிவைப்பது என்ற எண்ணத்திற்கு தற்போது திரிபுராவில் இடமில்லை என்று பிரதமர் கூறினார். முழு சக்தியோடும் நேர்மையோடும் மாநிலத்தின் வளர்ச்சியில் இப்போது இரட்டை என்ஜின் அரசு ஈடுபட்டுள்ளது.

 

இந்த பிராந்தியம் நீண்டகாலமாக புறக்கனிக்கப்பட்டிருப்பது பற்றி பேசிய பிரதமர். ஏற்கெனவே நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளைச் சேர்ந்த நமது ஆறுகள் கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன, ஆனால் கங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் இங்கே வருவதற்கு முன் தடுக்கப்பட்டுவிட்டது. “நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி துண்டு துண்டாக பார்க்கப்பட்டதோடு அரசியல் கண்ணாடி மூலமும் பார்க்கப்பட்டது. எனவே, நமது வட கிழக்கு புறக்கணித்ததாக உணர்நதது” என்று அவர் உறுதிபட தெரிவித்தார். “ஆனால் இன்று நாட்டின் வளர்ச்சி ‘ஒரே இந்தியா, உன்னத இந்தியா’ என்ற உணர்வுடன் பார்க்கப்படுகிறது ; இப்போது வளர்ச்சி என்பது நாட்டின் ஒற்றுமை – ஒருமைப்பாடு என்பதன் இணைவாக்க் கருதப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

பெண்களின் மிகச் சிறந்த பங்களிப்புக்காக இந்தியாவின் நம்பிக்கை மகளிர் சக்தி என பிரதமர் தனித்து குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சி முழு நம்பிக்கையோடு இருக்கிறது. இந்த மகளிர் சக்தியின் பெரும் அடையாளமாக நாம் மகளிர் சுய உதவிக் குழுக்களையும் பெற்றிருக்கிறோம்.  இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஜன் தன் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதன. இத்தகைய குழுக்களுக்கு பிணையம் இல்லாமல் கடன் வழங்குவது 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று திரு மோடி கூறினார்.

வாழ்க்கையை எளிதாக்குவது அதிகரித்து வருவது பற்றி பேசிய பிரதமர் ஏற்கெனவே சாமானிய மனிதன் ஒவ்வொரு வேலைக்கும் அரசு அலுவலகங்களை சுற்றிவரவேண்டியிருந்தது. ஆனால் இப்போது அனைத்து சேவைகளையும், வசதிகளையும் வழங்குவதற்கு மக்களைத் தேடி அரசே வருகிறது. “ஏற்கெனவே உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பது குறித்து அரசு ஊழியர்கள் கவலை கொண்டிருந்தனர், இப்போது அவர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பயன்களைப் பெறுகின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.

சுதந்திரத்தின் வரலாற்றில் நமது வடகிழக்கு மற்றும் நாட்டின் இதர பகுதிகளின் பழங்குடியின போராளிகள் நாட்டிற்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். இந்த பாரம்பரியத்தை கௌரவப்படுத்த இந்த மரபை முன்கொண்டு செல்ல நாடு ஓய்வின்றி பாடுபடுகிறது. இந்த வரிசையில் அம்ரித் மஹோத்சவ் காலத்தில் நாடு மற்றொரு பெரிய முடிவை எடுத்துள்ளது. பகவான் பிர்சா முன்டாவின் பிறந்த நாள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கௌரவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அக்டோபர் 2-அஹிம்சை தினம், அக்டோபர் 31-ஒற்றுமை தினம், ஜனவரி 26- குடியரசு தினம், ராமநவமி, கிருஷ்ணாஷ்டமி போன்றவற்றிற்கு இணையான முக்கியத்துவத்தை பெறும். “இந்த நாள் ஆதிவாசி சமாஜின் பங்களிப்புக்கு புகழாரம் சூட்டும் ஒரு நாளாக மட்டுமின்றி இணக்கமான சமூகத்தின் அடையாளமாகவும் உருவாகும்” என்று பிரதமர் கூறினார்.

அடிப்படை கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்துதல் மூலம் இந்த பிராந்தியத்தின் ஏராளமான வளத்தை பயன்படுத்த முடியும் என்று பிரதமர் கூறினார். இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் பணி நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்கு கொண்டுசெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

****


(Release ID: 1771706) Visitor Counter : 205