பிரதமர் அலுவலகம்
குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களுடன் நவம்பர் 3-அன்று பிரதமர் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளார்
प्रविष्टि तिथि:
31 OCT 2021 1:38PM by PIB Chennai
ஜி-20 உச்சிமாநாடு, சிஒபி-26 ஆகியவற்றில் பங்கேற்று நாடு திரும்பியவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களுடன் நவம்பர் 3-அன்று நண்பகல்வாக்கில் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டம், கொவிட் தடுப்பூசி முதல் டோஸை 50 சதவீதத்திற்குக் குறைவாகவும், இரண்டாவது டோஸினைக் குறைந்த எண்ணிக்கையிலும் செலுத்தியுள்ள மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் அதிகமான மாவட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். இந்த நிகழ்வில் இம்மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்பார்கள்.
****
(रिलीज़ आईडी: 1768104)
आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam