பிரதமர் அலுவலகம்

பிரதமர் கேர்ஸ் (PM CARES) நிதியில் நிறுவப்பட்ட பி எஸ் ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 07 OCT 2021 3:04PM by PIB Chennai

பாரத் மாதா கி  ஜெய்,

பாராத் மாதா கி ஜெய்,

உத்தரகாண்ட் ஆளுநர், லெப்டினன்ட் ஜெனரல்(ஓய்வு) குர்மீத் ஜிங், இளமையான, உற்சாகமான முதல்வரும், என நண்பருமான திரு புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர்கள் திரு மன்சுக் மாண்டவியா, மற்றும் திரு அஜய் பட், உத்தரகாண்ட் சபாநாயகர் திரு பிரேம் சந்த் அகர்வால், உத்ரகாண்ட் அமைச்சர்களே, முதல்வர்களே, துணை நிலை ஆளுநர்களே, பல மாநில அமைச்சர்களே, எம்.பிக்களே, எம்.எல்.,.க்களே மற்றும் எனது சகோதர சகோதரிகளே!

புனித விழாவான நவராத்திரி இன்று தொடங்குகிறதுநவராத்திரி முதல் நாளில் தாய் மலைமகளை வழிப்படுகிறேன். ஷைல்புத்ரி என்றால் இமயமலையின் மகள்.  "இந்த நாளில் நான் இங்கே இருக்கிறேன், இந்த மண்ணை வணங்க இங்கு வந்துள்ளேன், இந்த இமயமலை நிலத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன், வாழ்க்கையில், இதை விடப் பெரிய ஆசீர்வாதம் என்ன இருக்க முடியும்?"  ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த மாநிலத்திற்குப் பாராட்டுக்கள்.  "உத்தரகாண்ட் மண்ணுடனான எனது உறவு இதயத்திலிருந்து மட்டுமல்ல, செயலாலும் கூட மட்டுமல்ல, சாரம்சம்  மற்றும் பொருளும் ஆகும்.

நண்பர்களே,

முதல்வர் எனக்கு தற்போது ஞாபகம் படுத்தியது போல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான புதிய பொறுப்பைப் பெற்றேன்மக்களுக்கு சேவை செய்வதும், மக்கள் மத்தியில் வாழ்வதுமான எனது பயணம் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததுஆனால் இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் முதல்வராக எனக்கு  ஒரு புதிய பொறுப்பு கிடைத்ததுஉத்தரகாண்ட் மாநிலம்  உருவாக்கப்பட்ட சில மாதங்களுக்குள் நான் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றதால், எனது பயணத்தின் துவக்கம், உத்தரகாண்ட் மாநில உருவாக்கத்துடன் ஒத்துப்போனது.

நண்பர்களே,

மக்களின் ஆசிகளுடன், குஜராத் முதல்வர் பதவியை அடைவேன், பிறகு பிரதமர் பதவியை அடைவேன்  என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. எனது தடையற்ற 20 ஆண்டு பயணம் இன்று 21ம் ஆண்டில் நுழைந்துள்ளது.

சகோதர மற்றும் சகோதரிகளே,

யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற உயிர் கொடுக்கும் சக்திகள் வலுப்பெற்ற மண்ணிலிருந்து , இன்று, ஆக்ஸிஜன் ஆலைகள் அர்ப்பணிக்கப்படுகின்றன.   நாட்டின் பல மாநிலங்களில், இந்த ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளதற்காக, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நண்பர்களே,

இந்தியா, கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக குறுகிய காலத்தில் ஏற்படுத்திய வசதிகள், நமது நாட்டின் திறனைக் காட்டுகிறது. பெருந்தொற்றுநோய்க்கு முன்னர், ஒரு பரிசோதனை ஆய்வகம் என்றிருந்ததிலிருந்து, சுமார் 3000 பரிசோதனை ஆய்வகங்கள் கொண்ட நெட்வொர்க் உருவாக்கப்பட்டது. ஒரு இறக்குமதியாளராக இருந்து வந்த இந்தியா, முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணப் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட புதிய வென்டிலேட்டர் வசதிகள் வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டன. கொரோனா தடுப்பூசியை இந்தியா விரைவாகவும், பெருமளவிலும் தயாரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் விரைந்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி இயக்கத்தை இந்தியா செயல்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் செயல்பாடு நமது உறுதிப்பாடு, சேவை மற்றும் நமது ஒற்றுமையை காட்டுகிறது.

சகோதர, சகோதரிகளே,

கொரோனாவை எதிர்த்து போராடுகையில், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி விநியோகம் என்ற இரட்டை சவால்களை நாடு தொடர்ந்து சந்தித்தது. இந்த சவால்களை நாடு எப்படி எதிர்கொண்டது என்பதை அறிய வேண்டியது, ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியம்.

நண்பர்களே,

இந்தியா, சாதாரண நாட்களில், ஒரு நாளைக்கு 900 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வந்தது. தேவை அதிகரித்ததால், இந்தியா, மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை 10 மடங்குக்கு மேல் அதிகரித்தது. இது உலகிலுள்ள எந்த நாட்டிற்கும் கற்பனை செய்ய முடியாத இலக்கு; ஆனால் இந்தியா அதை அடைந்து விட்டது

நண்பர்களே,

ஆக்ஸிஜன் உற்பத்தியுடன், அதன் போக்குவரத்தும் மிகப் பெரிய சவாலாக இருந்தது என்பதை இங்குள்ளவர்கள் அறிவர். ஆக்ஸிஜனை கொண்டு செல்ல சிறப்பு டேங்கர் தேவை. இந்தியாவின் கிழக்கு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை, அது அதிகம் தேவைப்பட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவுக்கு அனுப்புவது மிகவும் சவாலான பணியாக இருந்தது

சகோதர மற்றும் சகோதரிகளே,

கொரோனாவை எதிர்த்து போராட நாடு போர்கால அடிப்படையில் செயல்பட்டது. ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் டேங்கர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆக்ஸிஜன் டேங்கர்கள், விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணியை மட்டும் பிரதமரின் நலநிதி விரைவுபடுத்தவில்லை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கும், இதிலிருந்து நிதி அளிக்கப்பட்டது.

 நண்பர்களே,

கடந்த சில மாதங்களில், 1,150-க்கும் மேற்பட்ட  ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு பிரதமரின் நல நிதி ஒப்புதல் வழங்கியது. தற்போது, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆக்ஸிஜன் ஆலைகள் பிரதமரின் நலநிதியில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் முயற்சிகளால், 4,000 புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை நாடு பெறப்போகிறது.

நண்பர்களே,

நாட்டில் 93 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கும் விஷயம். வெகு விரைவில் இந்தியா 100 கோடியைத் தாண்டும். கோவின் தளத்தை ஏற்படுத்தியதன் மூலம், பெருமளவில் எவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதற்கு முழு உலகிற்கும் இந்தியா வழி காட்டியுள்ளது

சகோதர, சகோதரிகளே,

6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எய்ம்ஸ் வசதி இருந்தது; இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 22 எய்ம்ஸ் என்ற வலுவான கட்டமைப்பை உருவாக்கும் வகையில், நாம் 6 எய்ம்ஸ் என்ற நிலையிலிருந்து வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது இருக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாகும்.

நண்பர்களே,

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய், உத்தரகாண்ட் உருவாக்கப்பட வேண்டும் என்ற கனவை நிறைவேற்றினார். இணைப்பு என்பது வளர்ச்சியுடன் நேரடி தொடர்பு கொண்டது என்று திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது உத்வேகத்தின் காரணமாக, இன்று நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் இணைப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

2019 இல் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன், உத்தரகாண்டில் 1,30,000 வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் கிடைத்திருந்தது. இன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் 7,10,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வரத் தொடங்கியுள்ளது என்றார். அதாவதுஇரண்டே ஆண்டுகளுக்குள், மாநிலத்தில் சுமார் 6 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கிடைத்துள்ளன.

நண்பர்களே,

ஒவ்வொரு ராணுவ வீரரின், ஒவ்வொரு முன்னாள் ராணுவ வீரரின் நலன்களுக்காகவும் அரசு மிகுந்த  அக்கறையுடன் செயல்படுகிறது. “ஒரு பதவிஒரு ஓய்வூதியம்திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் ராணுவத்தைச் சார்ந்த  நமது சகோதரர்களின் 40 ஆண்டுகால கோரிக்கையைத் தமது அரசு நிறைவேற்றியது.

நண்பர்களே,

உத்தரகாண்ட் மாநிலம் விரைவில் 25வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறது. உத்தரகாண்ட்டின் புதிய குழுவுக்கு மத்திய அரசு முழு உதவியை அளிக்கிறது. இங்கு இரட்டை என்ஜின் வளர்ச்சி, உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புதிய உச்சத்தை அளிக்கவுள்ளது. பாபா கேதர் ஆசியுடன், ஒவ்வொரு தீர்மானத்தையும் நாம் நிறைவேற்றுவோம்!

நன்றி!

 

------

 

 



(Release ID: 1762694) Visitor Counter : 182