பிரதமர் அலுவலகம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
25 SEP 2021 4:42AM by PIB Chennai
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பொது சேவையில் உற்சாகமான மற்றும் திருப்திகரமான பணி காத்திருக்கிறது.
தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர்கள், நம் நாட்டின் பயணத்தில் முக்கிய காலகட்டத்தின் போது குறிப்பிடத்தக்க நிர்வாக பணியை மேற்கொள்வார்கள்.
நீங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
அதேவேளையில், ஆய்வு செய்வதற்கான பன்முகத்தன்மை வாய்ந்த வாய்ப்புகள் இந்தியாவில் நிரம்பியிருக்கின்றன. நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் நல்வாழ்த்துகள்.”
*****************
(रिलीज़ आईडी: 1758014)
आगंतुक पटल : 350
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam