நிதி அமைச்சகம்

நிலுவையில் உள்ள கடன்களைப் பெறுவதற்காக தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள உரிமை ரசீதுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் தொடர்பான சந்தேகங்களும், பதில்களும்

Posted On: 16 SEP 2021 5:12PM by PIB Chennai

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் (NARCL) என்பது என்ன? இதனை ஏற்படுத்தியது யார்?

நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதுதான் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம். சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் என்ற பெயரில் உரிமம் பெறுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கப்பட்டது. தங்களது தொடர் நடவடிக்கைகளுக்காக வாராக்கடன்  சொத்துக்களை ஒருங்கிணைக்கவும், தொகுக்கவும் வங்கிகளால் உருவாக்கப்பட்டதுதான் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம். இதில், 51 சதவீத உரிமையை பொதுத்துறை வங்கிகள் வைத்துள்ளன.

இந்திய கடன் தீர்வு நிறுவனம் என்பது என்ன (IDRCL)? இதனை ஏற்படுத்தியது யார்?

இந்திய கடன் தீர்வு நிறுவனம் என்பது சேவை நிறுவனம்/ செயல்பாட்டு நிறுவனம். இது சொத்துக்களை கையாளும். சந்தை வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டி நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தும். அதிகபட்சமாக 49 சதவீத பங்குகளை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் வைத்திருக்கும். மீதமுள்ள பங்குகளை தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும்.

ஏற்கனவே சொத்து மறுகட்டமைப்புக்காக 28 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம், இந்திய கடன் தீர்வு நிறுவனம் போன்ற கட்டமைப்பு தேவைப்படுவது ஏன்?

ஏற்கனவே உள்ள சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்கள், நெருக்கடிக்கு உள்ளான சொத்துக்களை, குறிப்பாக சிறிய அளவிலான கடன்களுக்கு தீர்வுகாணவே உதவுகின்றன. நொடிப்பு நிலை மற்றும் திவாலாதல் விதிகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பயனளிக்கும் வகையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மிகப்பெரும் அளவில் வாராக்கடன்கள் இருக்கும்போது, அதனை சரிசெய்ய கூடுதல் வழிமுறைகள்/மாற்று முறைகள் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் - இந்திய கடன் தீர்வு நிறுவன அமைப்பு அறிவிக்கப்பட்டது.

அரசின் உத்தரவாதம் தேவைப்படுவது ஏன்?

வாராக்கடன் நிலுவையை எதிர்கொள்ளும் வகையிலான தீர்வு வழிமுறைகளுக்கு அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. இது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன், நெருக்கடியை குறைக்கச் செய்கிறது. தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிடும் ரூ.30,600 கோடி மதிப்பிலான உரிமை ரசீதுகளுக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த உத்தரவாதம், 5 ஆண்டுகளுக்கு பொருந்தும். உத்தரவாதம் அளிப்பதற்கான நிபந்தனையாக, கடனுக்கு தீர்வுகாண வேண்டும் அல்லது கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். உரிமை ரசீதின் முகமதிப்புக்கும், உண்மையில் பெறப்படும் தொகைக்கும் இடையேயான பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் உத்தரவாதம் இருக்கும். உரிமை ரசீதுகளை பணமாக்கும் நடவடிக்கையை இந்திய அரசின் உத்தரவாதம் அதிகரிக்கும். ஏனெனில், இதுபோன்ற உத்தரவாத ரசீதுகள் வர்த்தகம் செய்யக் கூடியவை.

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம், இந்திய கடன் தீர்வு நிறுவனம் ஆகியவை எவ்வாறு செயல்படும்?

முன்னணி வங்கிக்கு தனது திட்டத்தை தெரிவித்து, சொத்துக்களை தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் கையகப்படுத்தும். தேசிய சொத்து மறுகட்டமைப்பின் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனை கையாள்வது மற்றும் கூடுதல் மதிப்பளிப்பது ஆகிய பணிகளில் இந்திய கடன் தீர்வு நிறுவனம் ஈடுபடும்.

இந்த புதிய கட்டமைப்பு மூலம் வங்கிகளுக்கு கிடைக்கும் பலன் என்ன?

அதிக அளவில் தொகையை கிடைக்கச் செய்து, நெருக்கடியான சொத்துக்கள் விவகாரத்தில் விரைந்து தீர்வுகாண வழிவகை செய்கிறது. வங்கியில் உள்ள பணியாளர்கள், தங்களது வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், வரவை அதிகரிக்கச் செய்வதிலும் கவனம் செலுத்த இந்த வழிமுறை உதவுகிறது. நெருக்கடிக்கு உள்ளான சொத்துக்களின் உரிமையாளர்கள், உரிமை ரசீதுகள், வங்கிகள் ஆகியவற்றுக்கு பலன் கிடைக்கும். மேலும், வங்கி மதிப்பீட்டை அதிகரிப்பதுடன், சந்தையில் மூலதனத்தைப் பெறுவதற்கான திறனை அதிகரிக்கச் செய்யும்.

தற்போது இவை அமைக்கப்படுவது ஏன்?

நொடிப்பு நிலை மற்றும் திவாலாதல் விதிகள் (IBC), நிதி சொத்துக்கள் மறுகட்டமைப்பு மற்றும் உத்தரவாதத்தை வலுப்படுத்துவது மற்றும் பங்குகளின் நலனை அமலாக்குதல் (SARFAESI Act) , கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் ஆகியவற்றுடன் அதிக மதிப்புகொண்ட வாராக்கடன் கணக்குகளுக்காக வங்கிகளில் அமைக்கப்படும் நெருக்கடிக்குள்ளான சொத்து மேலாண்மை கட்டமைப்பு ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துகின்றன. இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வங்கிகளின் வரவு-செலவு கணக்குகளில் குறிப்பிட்ட அளவுக்கு வாராக்கடன்கள் தொடர்ந்து வருகின்றன. ஏனெனில், சொத்து தர ஆய்வின் தகவல்களின்படி, வாராக்கடன்களின் அளவு அதிகமாக இருப்பது மட்டுமன்றி, பல்வேறு வங்கிகளிலும் நிலுவையில் உள்ளன. வாராக்கடன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உயர்மட்ட வாய்ப்புகளை வழங்கும்போது, வேகமாக தீர்வுகாண்பதற்கு தனிப்பட்ட வாய்ப்பை அளிக்கும்.

உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

குறிப்பிட்ட சொத்திலிருந்து பெறப்படும் தொகைக்கும், குறிப்பிட்ட சொத்து மீதான உரிமை ரசீதின் முகமதிப்புக்கும் இடையே உள்ள தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக அரசு உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும், 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அளவு ரூ.30,600 கோடிக்கும் மேலாக இருக்கக் கூடாது. சொத்துக்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில், அதிலிருந்து கையகப்படுத்தும் செலவைவிட அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாகவும், உரிய நேரத்திலும் தீர்வுகாண்பதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்தும்?

இந்திய அரசின் உத்தரவாதம், 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. தீர்வுகாண வேண்டும் அல்லது சொத்துக்களை பணமாக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. தீர்வுகாண்பதில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், காலத்தை அதிகரிக்கும் சமயத்தில், உத்தரவாதக் கட்டணத்தை  தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தின் மூலதன கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் மற்றும் அரசின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்?

வங்கிகள் மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களிடமிருந்து பங்குகளைப் பெறுவதன் மூலம், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்துக்கு மூலதனம் திரட்டப்படுகிறது. தேவைப்படும் அளவுக்கு கடனும் பெறப்படுகிறது. மூலதன தேவைகளை இந்திய அரசின் உத்தரவாதம் குறைக்கிறது.

நெருக்கடிக்கு உள்ளாகும் சொத்துக்களுக்கு தீர்வுகாண தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தின் உத்தி என்ன?

ரூ.500 கோடிக்கும் மேலாக உள்ள ஒவ்வொரு நெருக்கடியான சொத்துக்கள் வீதம்,ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி வரை                      சொத்துக்களுக்கு தீர்வுகாண தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தில், ரூ.90,000 கோடி மதிப்பிலான முற்றிலும் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கள், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்துக்கு மாற்றப்படும். குறைந்த மதிப்பில் உள்ள மற்ற சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது கட்டத்தில் பரிமாற்றம் செய்யப்படும்.

-----



(Release ID: 1755500) Visitor Counter : 836