பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லெகாராவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2021 12:04PM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லெகாராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில்  பிரதமர் கூறியதாவது;

‘‘டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மேலும் பல அற்புத நிகழ்வுகள். அவானி லெகாராவின் அற்புதமான விளையாட்டால் உற்சாகம் அடைந்தேன். நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை பெற்று வந்ததற்கு வாழ்த்துகள். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். #Praise4Para ’’

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1751677) வருகையாளர் எண்ணிக்கை : 237