பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தடுப்பு மருந்து வழங்கல் சாதனைக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 27 AUG 2021 10:41PM by PIB Chennai

சாதனை அளவில் கொவிட் தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, 1 கோடி எண்ணிக்கையை கடந்துள்ளது சிறப்பான சாதனை என்று கூறியுள்ளார். 

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “சாதனை அளவிலான தடுப்பு மருந்துகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. 1 கோடி எண்ணிக்கையை கடந்துள்ளது சிறப்பான சாதனை. தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கும், தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை வெற்றியடைய செய்துக் கொண்டிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

 ******************

 


(Release ID: 1750017) Visitor Counter : 203