நிதி அமைச்சகம்

பிரதமரின் மக்கள் நிதி திட்டம் - அனைவருக்கும் நிதி சேவை வழங்குவதற்கான தேசிய இயக்கம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 7 ஆண்டுகள் நிறைவு


மக்கள் நிதி திட்டம் தொடங்கப்பட்டது முதல் 43.04 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கு- ரூ.1,46,231 கோடி வைப்புத் தொகை

“குறுகிய காலமான 7 ஆண்டுகளில் பிரதமரின் மக்கள் நிதி திட்டம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மூலம், நேரடி மாற்றமும், மறைமுக மாற்றமும் ஏற்பட்டுள்ளது, நிதி உள்ளடக்க முயற்சிகள் சமூகத்தில் கடைசி நிலையில் உள்ள ஏழைகளிலும் ஏழைகளுக்கு நிதி சேவைகளை வழங்கியுள்ளது”- நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உள்ளடக்க வளர்ச்சிக்கு காரணமான நிதி உள்ளடக்க முயற்சிகள், அரசின் அதிமுக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது – நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத்

மக்கள் நிதி கணக்குகளின் அளவு மார்ச் 2015-ல் இருந்த ரூ.14.72 கோடியிலிருந்து 18.08.21-ல் ரூ.43.04 கோடியாக மூன்று மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது

மக்கள் நிதி கணக்கு வைத்துள்ள 55% பேர் பெண்கள் மற்றும் 67% பேர் கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்

ஒட்டுமொத்தமாக உள்ள 43.04 கோடி மக்கள் நிதி கணக்குகளில் 36.86 கோடி (86%) கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன

Posted On: 28 AUG 2021 7:30AM by PIB Chennai

சமூக-பொருளாதார அடிப்படையில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிக்கவும், நிதி சேவைகளை வழங்கவும் நிதியமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. உள்ளடக்க வளர்ச்சிக்கு வழிவகை செய்யும், நிதி உள்ளடக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் தேசிய முன்னுரிமையாக உள்ளது. இது ஏழைகளை, தங்களது சேமிப்புகளை முறையான நிதி அமைப்புகளுக்கு கொண்டுவரச் செய்வதுடன், கிராமப்புறங்களில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு கிடைக்கச் செய்யவும் வழிவகை செய்கிறது. அதோடு, கந்துவட்டிக் கும்பலிடம் சிக்காமல் தடுப்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முக்கிய நடவடிக்கையாக பிரதமரின் மக்கள் நிதி திட்டம் திகழ்கிறது. இது உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் நிதி உள்ளடக்க நடவடிக்கைகளில் ஒன்றாக திகழ்கிறது.

மக்கள் நிதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15, 2014-ல் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இந்தத் திட்டத்தை ஆகஸ்ட் 28-ல் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, தீய சக்திகளிடமிருந்து ஏழைகளுக்கு சுதந்திரம் வழங்கும் இந்த நிகழ்வு,  திருவிழாவாக கொண்டாட வேண்டிய தருணம் என்று தெரிவித்தார்.

பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் 7-ம் ஆண்டையொட்டி, இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். அப்போது அவர், “குறுகிய காலமான 7 ஆண்டுகளில் பிரதமரின் மக்கள் நிதி திட்டம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மூலம், நேரடி மாற்றமும், மறைமுக மாற்றமும் ஏற்பட்டுள்ளது, நிதி உள்ளடக்க முயற்சிகள் சமூகத்தில் கடைசி நிலையில் உள்ள ஏழைகளிலும் ஏழைகளுக்கு நிதி சேவைகளை வழங்கியுள்ளது. வங்கி சேவை கிடைக்காதவர்களுக்கு வங்கி சேவை வழங்குவது, பாதுகாப்பு இல்லாத சூழலுக்கு பாதுகாப்பு வழங்குவது, நிதி கிடைக்காதவர்களுக்கு நிதி கிடைக்கச் செய்வது என்ற பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் நோக்கங்கள், பல்வேறு தரப்பினருக்கும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்கச் செய்துள்ளது. அதேநேரம், சேவை கிடைக்காதவர்களுக்கும், குறைவான சேவை கிடைத்தவர்களுக்கும் கூட சமமான அளவில் தொழில்நுட்பங்கள் கிடைத்துள்ளன,” என்றார்.

இந்தத் தருணத்தில் நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத்தும், பிரதமரின் மக்கள் நிதி திட்டம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அவர், இந்தியாவில் மட்டுமன்றி,, உலக அளவிலும் அதிக அளவில் மக்களைச் சென்றடைந்த நிதி உள்ளடக்க முயற்சியாக பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் திகழ்கிறது. உள்ளடக்கிய வளர்ச்சிக்கு காரணமாக அமையும் நிதி உள்ளடக்க நடவடிக்கைகள் அரசின் அதி முன்னுரிமைகளில் ஒன்றாக திகழ்கிறது. இது ஏழைகளுக்கு தங்களது சேமிப்புகளை முறையான நிதி அமைப்புகளுக்குள் கொண்டுவர வழிவகை செய்கிறது. தங்களது குடும்பத்தினருக்காக பணத்தை எடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதோடு, ஏழைகளை கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து வெளியேற்றுகிறது,” என்றார்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி 7 ஆண்டுகளை நாம் நிறைவுசெய்துள்ளோம். இந்த சூழலில், இந்தத் திட்டத்தின் மிகப்பெரும் அம்சங்கள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை காணலாம்…

பின்னணி

பிரதமரின் மக்கள் நிதி திட்டம் என்பது, நிதி சேவைகள் கிடைக்கச் செய்வதை உறுதிசெய்வதற்கான நிதி உள்ளடக்கத்துக்கான தேசிய இயக்கம். இதில், வங்கி/சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள், பணம் எடுப்பது, கடன், காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய நிதி சேவைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

  1. நோக்கம்:
  • குறைந்த செலவில் நிதி சேவைகள் மற்றும் நிதி திட்டங்களை கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவது
  • குறைந்த செலவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் அதனை பெரும்பாலான மக்களுக்கு விரிவுபடுத்துவது
  1. திட்டத்தின் அடிப்படை கொள்கைகள்
  • வங்கிச் சேவை கிடைக்காதவர்களுக்கு வங்கி சேவை- குறைந்த அளவிலான ஆவணங்களுடன் அடிப்படை சேமிப்பு கணக்கு தொடங்குதல், வாடிக்கையாளர்களின் தகவல்களை பெறுவதில் தளர்வுகள், மின்னணு முறையில் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெறுதல், பெருமளவில் கணக்குகளை தொடங்குவது, வைப்புத் தொகை கட்டுப்பாடுகள் இல்லாத மற்றும் கட்டணம் இல்லாமல் செய்தல்.
  • பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது – பணம் எடுப்பதற்கும், பொருட்களை வாங்குவதற்கு பணம் செலுத்தவும் தனியாக பற்று அட்டைகளை வழங்குவது. ரூ.2 லட்சம் வரையான இலவச விபத்து காப்பீடு
  • நிதியில்லாதவர்களுக்கு நிதி கிடைக்கச் செய்வது – நுண் காப்பீடு, பயன்பாட்டுக்கு கூடுதல் பணம் எடுப்பது, நுண்-ஓய்வூதியம் மற்றும் நுண்-கடன்
  1. தொடக்க அம்சங்கள்

கீழ்க்காணும் 6 அம்சங்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது:

  • அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்கச் செய்தல் – கிளை மற்றும் வங்கி பிரதிநிதிகள் மூலம்
  • தகுதிவாய்ந்த ஒவ்வொரு வயதுவந்தோருக்கும் கூடுதலாக ரூ.10,000 எடுத்துக் கொள்ளும் வசதியுடன் அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்கு
  • நிதி செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொடுக்கும் திட்டம் – சேமிப்புகளை ஊக்குவித்தல், ஏடிஎம்-களைப் பயன்படுத்துதல், கடன் பெறுவதற்கு தயாராகுதல், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் கிடைக்கச் செய்தல், வங்கி சேவைகளுக்கு அடிப்படை மொபைல் போன்களை பயன்படுத்துதல்
  • கடன் உத்தரவாத நிதியை உருவாக்குதல் – கடனை திரும்பச் செலுத்தாத விவகாரங்களில் வங்கிகளுக்கு உத்தரவாதம் அளித்தல்
  • காப்பீடு – ஆகஸ்ட் 15, 2014 முதல் ஜனவரி 31, 2015 வரையான காலத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு ரூ.1 லட்சம் வரை விபத்துக் காப்பீடு மற்றும் ரூ.30 ஆயிரம் வரை ஆயுள் காப்பீடு
  • அமைப்புசாரா துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம்
  1. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் மக்கள் நிதி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கியமான செயல்பாடுகள்
  • வங்கிகளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பில் ஆன்லைன் கணக்குகளை தொடங்குவது. இதற்கு முன்னதாக, ஆன்லைன் அல்லாத முறையில் கணக்குகள் தொடங்கப்பட்டு, தொழில்நுட்ப பயன்பாடுகள் வங்கிகளில் மட்டுமே இருந்தது.
  • ரூபே பற்று அட்டை அல்லது ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறை மூலம் ஒன்றையொன்று சார்ந்த பயன்பாட்டு முறை
  • நிலையான அம்சங்களுடன் வங்கி பிரதிநிதிகள்
  • எளிதான முறையில் வாடிக்கையாளர் குறித்த தகவல்கள்/ ஏற்கனவே உள்ள நெருக்கடியான முறையிலான வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களுக்கு மாற்றான மின்னணு – வாடிக்கையாளர்கள் தகவல் முறை
  1. புதிய அம்சங்களுடன் மக்கள் நிதி திட்டம் விரிவாக்கம் – சில மாறுபாடுகளுடன் ஒருங்கிணைந்த பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தை 28.8.2018-க்குப் பிறகும் நீட்டிக்க அரசு முடிவுசெய்தது.
  • ஒவ்வொரு குடும்பம் என்ற அடிப்படையில் இல்லாமல் கணக்கு இல்லாத ஒவ்வொரு வயதுவந்தோர் என்ற அடிப்படையில் கவனம் செலுத்துவது
  • ரூபே காப்பீட்டு அட்டை – 28.8.2018-க்குப் பிறகு தொடங்கப்படும் மக்கள் நிதி கணக்குகளுக்கு ரூபே கார்டுகள் மீதான இலவச விபத்து காப்பீட்டு வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிப்பு
  • இருப்புக்கும் மேலாக கூடுதலாக பணம் எடுக்கும் வரம்பை அதிகரித்தல்
  1. இருப்புக்கும் மேலாக கூடுதல் பணம் எடுக்கும் வரம்பு ரூ.5,000-லிருந்து ரூ.10,000-ஆக அதிகரிப்பு; (நிபந்தனைகள் இல்லாமல்) கூடுதலாக பணம் எடுக்கும் வரம்பு ரூ.2,000
  2. கூடுதல் பணம் எடுப்பதற்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு 60-லிருந்து 65-ஆக அதிகரிப்பு
  1. பிரதமரின் மக்கள் நிதி கணக்குகளால் ஏற்பட்ட தாக்கம்

மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கான அடிக்கல்லாக பிரதமரின் மக்கள் நிதி திட்டம் அமைந்துள்ளது. நேரடி மானிய பரிமாற்றம், கொரோனா கால நிதி உதவி, பிரதமரின் விவசாயிகள் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் அதிகரிக்கப்பட்ட ஊதியம், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடு என எதுவாக இருந்தாலும் இதற்கு முதல் நடவடிக்கையாக, ஒவ்வொரு வயதுவந்தோருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டியுள்ளது இதனை மக்கள் நிதி கணக்கு திட்டம் நிறைவேற்றுகிறது.

மார்ச் 2014 முதல் மார்ச் 2020 வரையான காலத்தில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகளில் இரண்டில் ஒன்று, பிரதமரின் மக்கள் நிதி கணக்காக இருந்தது. தேசிய அளவிலான பொதுமுடக்கத்தில் 10 நாட்களுக்குள் 20 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் மக்கள் நிதி கணக்குகளில் நிவாரண உதவி வரவு  வைக்கப்பட்டது.

மக்கள் நிதி திட்டம், ஏழைகளுக்கு தங்களது பணத்தை முறையான நிதி அமைப்பில் சேமிப்பதற்கு வழிவகை செய்கிறது. கிராமப்புறங்களில் தங்களது குடும்பத்தினருக்கு வழங்க வழியை ஏற்படுத்துகிறது. அதோடு, கந்துவட்டிக் கும்பலிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. வங்கிக்கணக்கு இல்லாதவர்களை வங்கி அமைப்புக்குள் பிரதமரின் மக்கள் நிதி திட்டம் கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் நிதி கட்டமைப்பை விரிவாக்கம் செய்துள்ளது. வயதுவந்த ஒவ்வொருவரையும் நிதி உள்ளடக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளது.

இன்றைய கொரோனா தொற்று பரவல் காலத்தில், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதுடன் அவர்களை மேம்படுத்துவதில் நேரடி மானியத் திட்டம் தடையில்லாமலும், வேகமாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம். இந்த நேரடி மானியத் திட்டத்தில் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு ரூபாயும் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதையும், முறைகேடான நபர்களுக்கு செல்லாத வகையிலும் பிரதமரின் மக்கள் நிதி கணக்குகள் உறுதிப்படுத்தியுள்ளன.

  1.  பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் – ஆகஸ்ட் 18, 2021-ன் படி

அ. பிரதமரின் மக்கள் நிதி கணக்குகள்

⮚      ஆகஸ்ட் 18, 2021-ன்படி ஒட்டுமொத்தமாக உள்ள பிரதமரின் மக்கள் நிதி கணக்குகள்: 43.04 கோடி; 55.47% (23.87 கோடி) கணக்கு வைத்திருப்போர் பெண்கள் மற்றும் 66.69% (28.70 கோடி) கணக்குகள் கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடங்கப்பட்டனஆகஸ்ட் 18, 2021-ன்படி ஒட்டுமொத்தமாக உள்ள பிரதமரின் மக்கள் நிதி கணக்குகள்: 43.04 கோடி; 55.47% (23.87 கோடி) கணக்கு வைத்திருப்போர் பெண்கள் மற்றும் 66.69% (28.70 கோடி) கணக்குகள் கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடங்கப்பட்டன

  • இந்தத் திட்டத்தின் முதலாம் ஆண்டில் 17.90 கோடி மக்கள் நிதி கணக்குகள் தொடங்கப்பட்டன
  • மக்கள் நிதி திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது
  • மார்ச் 2015-ல் 14.72 கோடியாக இருந்த பிரதமரின் மக்கள் நிதி கணக்குகள் அளவு 18.8.2021-ல் மூன்று மடங்கு அதிகரித்து 43.04 கோடியாக இருந்தது. நிதி உள்ளடக்கத் திட்டத்தில் மிகப்பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆ. செயல்பாட்டில் உள்ள மக்கள் நிதி கணக்குகள்-

  • தற்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின்படி, இரண்டு ஆண்டு காலத்தில் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால், அந்த பிரதமரின் மக்கள் நிதி கணக்கு செயல்பாட்டில் இல்லை என்று கருதப்படும்
  • ஆகஸ்ட் 2021-ன்படி, ஒட்டுமொத்தமாக இருந்த 43.04 கோடி மக்கள் நிதி கணக்குகளில், 36.86 கோடி (85.6%) கணக்குகள் செயல்பாட்டில் இருந்தன
  • செயல்பாட்டில் உள்ள கணக்குகளின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்துவருவதன் மூலம், அதிக அளவிலான இந்தக் கணக்குகளை வாடிக்கையாளர்கள் வழக்கமான முறையில் பயன்படுத்தி வருவது தெளிவாகிறது
  • 8.2% மக்கள் நிதி கணக்குகளே முற்றிலும் வைப்புத் தொகை இல்லாத கணக்குகளாக உள்ளன

இ. பிரதமரின் மக்கள் நிதி கணக்குகளில் வைப்புத் தொகை-

  • பிரதமரின் மக்கள் நிதி கணக்குகளில் இருந்த ஒட்டுமொத்த வைப்புத் தொகை இருப்பு அளவு ரூ.1,46,230 கோடி
  • கணக்குகளின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்த நிலையில், வைப்புத் தொகை அளவு 6.38 மடங்கு அதிகரித்துள்ளது (ஆகஸ்ட் 2015 முதல் ஆகஸ்ட் 2021 வரையான காலம்)

ஈ. ஒவ்வொரு மக்கள் நிதி கணக்கிலும் உள்ள சராசரி வைப்புத் தொகை -

  • ஒவ்வொரு கணக்கிலும் சராசரி வைப்புத் தொகை ரூ.3,398
  • ஆகஸ்ட் 2015-க்குப் பிறகு ஒவ்வொரு கணக்கிலும் சராசரி வைப்புத் தொகை அளவு 2.7 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது
  • சராசரி சேமிப்புத் தொகை அளவு அதிகரித்து வருவது என்பது, கணக்குகளை பயன்படுத்துவது அதிகரிப்பதையும், கணக்கு வைத்திருப்போர் மத்தியில் சேமிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதையும் காட்டுகிறது.

உ. மக்கள் நிதி கணக்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட ரூபே அட்டைகள்

  • பிரதமரின் மக்கள் நிதி கணக்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த ரூபே அட்டைகளின் எண்ணிக்கை: 31.23 கோடி
  • ரூபே அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது  8 மக்கள் நிதி தர்ஷக் செயலி

நாட்டில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்-கள், வங்கி முகவர்கள், அஞ்சலகங்கள் போன்ற வங்கியுடன் தொடர்புடையவர்கள் எங்கெல்லாமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக மக்களை அடிப்படையாகக் கொண்ட மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. புவி தகவல் அமைப்பு செயலியில், வங்கியுடன் தொடர்புடைய 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டியலிடப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள், தங்களது தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப மக்கள் நிதி தர்ஷக் செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த செயலியின் வலைதள பதிப்பை இந்த இணைப்பின் மூலம் பெற முடியும். http://findmybank.gov.in.

5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வங்கியுடன் தொடர்புடைய நபர்கள் இல்லாத கிராமங்களை அடையாளம்  காண்பதற்கும் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கண்டறியப்பட்ட கிராமங்களில் வங்கி கிளைகளைத் தொடங்க குறிப்பிட்ட மாநில அளவிலான வங்கிக் குழுக்கள் நடவடிக்கை எடுத்தன. இந்த முயற்சியின் மூலம், வங்கி இணைப்பு வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை குறைந்தது.

  1. பிரதமரின் மக்கள் நிதி கணக்கு பெண் பயனாளிகளுக்கு பிரதமரின் ஏழைகள் நல தொகுப்பு

மத்திய நிதியமைச்சர் கடந்த 26.3.2020-ல் வெளியிட்ட அறிவிப்பின்படி, பிரதமரின் மக்கள் நிதி கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்குகளுக்கு மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை) மாதந்தோறும் ரூ.500 வீதம் பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின்கீழ் பணம் வரவுவைக்கப்பட்டது. கொரோனா பொதுமுடக்க

காலத்தில் மக்கள் நிதி கணக்கு வைத்துள்ள பெண் பயனாளிகளின் கணக்கில் ஒட்டுமொத்தமாக ரூ.30,945 கோடி வரவு வைக்கப்பட்டது.

  1. நேரடி மானிய திட்ட பரிவர்த்தனைகள் வழக்கமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதை நோக்கி:

வங்கிகள் அளித்த தகவல்களின்படி, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ், சுமார் 5 கோடி மக்கள் நிதி கணக்குதாரர்கள், நேரடி மானிய பரிவர்த்தனையை பெற்றுள்ளனர். தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நேரடி மானியம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக, நேரடி மானிய பரிமாற்றத்தில் ஏற்படும் தவறுகளில் தவிர்க்க முடிந்தவற்றை கண்டறிவதற்காக நிதித்துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக நேரடி மானிய பரிமாற்ற இயக்கம், இந்திய தேசிய பணம் செலுத்துதல் கழகம் (என்பிசிஐ), வங்கிகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் உன்னிப்பாக கண்காணித்து, வங்கிகள் மற்றும் இந்திய தேசிய பணம் செலுத்துதல் கழகத்துடன் காணொலிக்காட்சி மூலம் அடிக்கடி மேற்கொண்ட ஆலோசனைகள் மூலம், தவிர்க்க முடிந்த காரணங்களால் நேரடி மானிய பரிமாற்றத்தில் ஏற்படும் தவறுகளின் சதவீதம், ஒட்டுமொத்த தவறுகளின் அளவில் 13.5%-லிருந்து (2019-20) 5.7%-ஆக (2020-21 நிதியாண்டு) குறைந்துள்ளது.

  1. எதிர்கால திட்டங்கள்
  1. பிரதமரின் மக்கள் நிதி கணக்கு வைத்திருப்போரை நுண்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதை உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தகுதிவாய்ந்த மக்கள் நிதி கணக்கு பயனாளிகளுக்கு, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமரின் சுரக்ஷ பீமா திட்டம் ஆகியவற்றின் பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வங்கிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன்மூலம், பிரதமரின் மக்கள் நிதி கணக்கு வைத்திருப்போர் மத்தியில் ரூபே பற்று அட்டை பயன்பாடு உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவித்தல்.
  3. பிரதமரின் மக்கள் நிதி கணக்கு வைத்திருப்போருக்கு மாதாந்திர தவணைகளை தேர்வுசெய்யும் வகையிலான சேமிப்புத் திட்டம் போன்ற நுண்கடன் மற்றும் நுண்முதலீடு வசதிகள் கிடைப்பதை மேம்படுத்துவது.

 

***



(Release ID: 1749778) Visitor Counter : 5196