பிரதமர் அலுவலகம்

ஆகஸ்ட் 11: சிஐஐ வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார்

प्रविष्टि तिथि: 09 AUG 2021 10:07PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆகஸ்ட் 11-ந் தேதியன்று மாலை 4.30 மணிக்கு, காணொலி வாயிலாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். “இந்தியா@75: தற்சார்பு இந்தியாவுக்காக அரசும், தொழில்களும் இணைந்து பாடுபடுவது என்பதுதான் இந்தக் கூட்டத்தின் மையப் பொருளாகும்.

2021 சிஐஐ வருடாந்திர கூட்டம் பற்றி

ஆகஸ்ட் 11 மற்றும் 12 தேதிகளில் சிஐஐ அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமரும், அந்நாட்டு பொருளாதார கொள்கைகளின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு.ஹெங் சுவீ கீட், இந்தக் கூட்டத்தில் சிறப்பு சர்வதேச விருந்தினராக உரையாற்ற உள்ளார். பல்வேறு அமைச்சர்கள், உயரதிகாரிகள், கல்வியாளர்கள், இந்திய தொழில்துறையின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

***


(रिलीज़ आईडी: 1744323) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Malayalam , English , Urdu , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada