பிரதமர் அலுவலகம்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில், அற்புதமான செயல்பாட்டுக்காக இந்திய குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து


திறமையான புதியவர்களை உருவாக்க, அடிமட்டத்திலிருந்து விளையாட்டுக்களை மேலும் பிரபலப்படுத்த தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு

நன்கு திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டியை நடத்தியதற்காக ஜப்பான் அரசுக்கும், மக்களுக்கும் பிரதமர் நன்றி

Posted On: 08 AUG 2021 6:18PM by PIB Chennai

ஒலிம்பிக் போட்டியில் இந்தியக் குழுவினரின் அற்புதமான செயல்பாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி நிறைவடையவுள்ளதால், இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு விளையாட்டு வீரரும் சாம்பியன் என பிரதமர் கூறினார்.

இந்தியா வென்ற பதக்கங்கள், நிச்சயமாக நாட்டை  பெருமிதம் அடையச் செய்து ஊக்குவித்துள்ளது என அவர் கூறினார்.

அதேநேரத்தில், அடிமட்டத்திலிருந்து விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த தொடர்ந்து பணியாற்ற இதுதான் சரியான நேரம், அப்போதுதான் புதிய திறமையாளர்கள் உருவாகிவரும் காலங்களில் இந்தியா சார்பில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவர் என்றும் அவர் கூறினார்.

 நன்கு திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டியை நடத்தியதற்காக ஜப்பான் அரசுக்கும், மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இது குறித்து தொடர் சுட்டுரைகளில் செய்தி வெளியிட்ட பிரதமர் கூறியதாவது:

‘‘டோக்கியோ 2020 நிறைவடையவுள்ளதால், விளையாட்டு போட்டிகளில் அருமையான செயல்பாட்டுக்காக இந்திய குழுவினரை பாராட்ட விரும்புகிறேன். சிறந்த திறன், குழுப்பணி மற்றும் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு விளையாட்டு வீரரும் சாம்பியன்’’

இந்தியா வென்ற பதக்கங்கள், நிச்சயமாக நாட்டை  பெருமிதம் அடையச் செய்து ஊக்குவித்துள்ளது.

அதேநேரத்தில், அடிமட்டத்திலிருந்து விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த தொடர்ந்து பணியாற்ற இதுதான் சரியான நேரம், அப்போதுதான் புதிய திறமையாளர்கள் உருவாகிவரும் காலங்களில் இந்தியா சார்பில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவர்.

நன்கு திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டியை நடத்தியதற்காக, ஜப்பான் அரசுக்கும், மக்களுக்கும் சிறப்பு நன்றி, குறிப்பாக டோக்கியோவுக்கு.

இது போன்ற நேரங்களில், மிக வெற்றிகரமாக விளையாட்டு போட்டியை நடத்துவது, மீண்டுவருவதற்கான வலுவான தகவலை தெரியப்படுத்தியுள்ளது.  விளையாட்டுக்கள் எவ்வாறு மிகச் சிறந்த ஒன்றிணைப்பாளராக இருக்கிறது என்பதையும் இது நிரூபித்துள்ளது. #Tokyo2020’’

*****************


(Release ID: 1743859) Visitor Counter : 285