பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பள்ளிக் கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ர சிக்‌ஷா) திட்டத்தை 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2026 மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசின் பங்கு ரூ. 1,85,398.32 கோடி உட்பட இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,94,283.04 கோடி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1.16 மில்லியன் பள்ளிகள், 156 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 5.7 மில்லியன் ஆசிரியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்

Posted On: 04 AUG 2021 3:57PM by PIB Chennai

பள்ளி கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ரா சிக்‌ஷா ) திட்டத்தை 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளதுமத்திய அரசின் பங்கு ரூ..1,85,398.32  கோடி உட்பட, இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,94,283.04  கோடி.

பயன்கள்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1.16 மில்லியன் பள்ளிகள், 156 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 5.7 மில்லியன் ஆசிரியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். ( ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை)

விவரங்கள்:

* இந்த திட்டம் கல்விக்கான நிலையான மேம்பாட்டு இலக்குக்கு (SDG-4) தகுந்தபடி உள்ளது. தற்போது   தேசிய கல்வி கொள்கை (NEP) 2020 உடன் இணக்கமான மற்றும் சமமான, தரமான மற்றும் முழுமையான பள்ளிக் கல்வியை உறுதி செய்கிறது.

* இத்திட்டம் அனைத்து குழந்தைகளும் சமமான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய வகுப்பறை சூழலுடன், தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுஇது குழந்தைகளின் மாறுபட்ட பின்னணி, பன்மொழித் தேவைகள், வெவ்வேறு கல்வித் திறன்கள் ஆகியவற்றைக் கவனித்துஅவர்களை கற்கும் நடைமுறையில், தீவிர பங்கேற்பாளர்களாக ஆக்குகிறது.

* முழுமையான கல்வி திட்டம்  தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யவும், கடைக்கோடி வரை சென்றடையவும், முழுமையான கல்வி திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்துக்கும்  அளவிடக்கூடிய, முக்கிய செயல்பாட்டு அளவீடுகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரை அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்ட சமக்ர சிக்‌ஷா திட்டத்தில், புதிய விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

1. ஆரம்ப கல்விக்கு முந்தைய நிலை:

* அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க, மாஸ்டர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி. ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி.

* அரசு ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் கற்பதற்கான பொருட்கள், உள்நாட்டு பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்க ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.500 வரை செலவு செய்யும் வசதி.

* அரசு ஆரம்ப பள்ளிகளில், ஆரம்ப கல்விக்கு முந்தைய பிரிவுக்கு உதவி.

2. நிபுன் பாரத் திட்டத்துக்கு உதவி:

3வது கிரேடு முடிவில், ஒவ்வொரு குழந்தையும் படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவு ஆகியவற்றில் விரும்பத்தக்க திறன்களை உறுதி செய்ய அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

* இதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 வரை செலவு செய்யும் வசதி, ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மற்றும் பொருட்கள் வாங்க தலா ரூ.150, ஒரு மாவட்டத்துக்கு ரூ.10 முதல் 20 லட்சம் செலவு செய்யும் வசதி இதில் உள்ளது.

* அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை ஆரம்ப கல்விக்கு முந்தைய பிரிவு குழந்தைகளுக்கு கற்பிக்க நிஷ்தா திட்டத்தின் கீழ் ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

3. தொடக்க நிலை கல்வி: மாநிலங்களில் உள்ள தொடக்க பள்ளிகளில் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க மாநில ஆணையத்துக்கு ஒரு பள்ளிக்கு ரூ.50 என்ற அளவில் நிதி உதவி அளிக்கப்படும்.

* மாணவர்களுக்கான பயன்கள் குறுகிய காலத்தில் நேரடியாக சென்றடைய அதிக வலியுறுத்தல்  அளிக்கப்படும்.

4. மேல் நிலை:

* மேல்நிலைக் கல்வி வரை செல்வதை பொதுவானதாக மாற்றப்படுகிறது.

* மேல்நிலைப் பள்ளிகளில், துணைப்பாட பிரிவுகளுக்கு பதில், புதிய பாடப்பிரிவுகளை சேர்த்தல்.

* போக்குவரத்து வசதி மேல்நிலைப்பள்ளி வரை நீட்டிப்பு. ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் வரை செலவிடப்படும்

* பள்ளிகளுக்கு வெளியேயுள்ள 16 முதல் 19 வயது வரையுள்ள  பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகள்,  மாற்றுத்திறனாளி குழந்தைகள் மேல் நிலைப்படிப்பை முடிக்க ஒரு குழந்தைக்கு ரூ.2000 வரை திறந்தவெளி பள்ளிகள் ( NIOS/SOS) மூலம் வழங்கப்படும்

5. அனைத்து நிலைகளிலும் தரம் மற்றும் புத்தாக்கம்:

* முழுமையான, முன்னேற்றத்தை தெரிவிக்கும் பல பரிமாண அறிக்கை, முழுமையான மதிப்பெண் அட்டை  (HPC) வடிவில் அறிமுகப்படுத்தப்படும்.

* தேசிய அளவில் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுகளில் குறைந்தது 2 மாணவர்கள் பதக்கம் பெற்றால் அந்த பள்ளிகளுக்கு ரூ.25,000 வரை கூடுதல் விளையாட்டு மானியமாக அளிக்கப்படும்.

* பைகள் இன்றி பள்ளிக் செல்லும் வகையில் பாடத்திட்டம், மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* ஆரம்ப கல்வி முதல் பிளஸ் 2 ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் தொழில் மேம்பாட்டு பயிற்சி

6. சமநிலை மற்றும் உள்ளடக்கம்:

* அனைத்து பள்ளிகளும் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

* 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கான விடுதிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை அளிக்கப்படும். (முன்பு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை வழங்கப்பட்டது)

* மாணவிகளின் விடுதிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் இன்சினிரேட்டர் ஆகியவை வழங்கப்படும்.

* சுய பாதுகாப்பு திறனை வளர்த்துக் கொள்ள  3 மாத பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் ராணி லட்சுமிபாய் ஆத்ம ரக்‌ஷா பிரசிக்‌ஷன் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.3,000-லிருந்து ரூ.5,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

7. தொழில் கல்வி:

தொழில் கல்விக்கான உதவி, அரசு பள்ளிகளோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிகளில் உள்ள தொழில்கல்விக்கான வகுப்பறை மற்றும் பயிலரங்கம், அருகில் உள்ள இதர பள்ளிகளுக்கும் பயிற்சி மையமாக சேவையாற்றும்

8. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப  (ICT ) பரிசோதனைக் கூடங்கள் மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகள்:

* ஐசிடி பரிசோதனை கூடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள் மற்றும் டிடிஎச் சேனல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

9. சமூக தணிக்கைக்கு உதவி: இத்திட்டம் ஆண்டுக்கு 20 சதவீத பள்ளிகளில் செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தில் தன்னார்வ இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபடுவர்.

10. மொழி ஆசிரியர்கள் நியமனம்: இத்திட்டத்தில் மொழி ஆசிரியர்கள் நியமனம் என்ற புதிய அம்சம்  சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி அம்சங்கள் மற்றும் இரட்டை மொழி பாடப்புத்தகங்கள் மற்றும் கற்பிக்கும், கற்றல் உபகரணங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தி மற்றும் உருது ஆசிரியர்களுக்கான சம்பளத்துக்கும் உதவி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742287

----(Release ID: 1742455) Visitor Counter : 560