பிரதமர் அலுவலகம்

மைகவ் ஏழு வருடங்களை நிறைவு செய்ததை ஒட்டி தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 26 JUL 2021 6:30PM by PIB Chennai

மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

மைகவ் இந்தியாவின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர், “அனைவரும் பங்கு பெறும் ஆட்சி முறைக்கும், நமது இளைஞர் சக்திக்கு குரல் கொடுப்பதற்குமான சிறப்பான உதாரணமாக மைகவ் உயர்ந்து நிற்கிறது.

#7YearsOfMyGov (மைகவ்-வின் ஏழு வருடங்களை) நாம் இன்று குறிக்கும் போது, மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களை நான் பாராட்டுகிறேன்,” என்று தெரிவித்தார்.

 

-----

 


(रिलीज़ आईडी: 1739224) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam