பிரதமர் அலுவலகம்

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவர் பிரகாஷானந்தா ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 07 JUL 2021 3:38PM by PIB Chennai

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவர் பிரகாஷானந்தா ஜி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ அறிவு மற்றும் ஆன்மீகத்தின் ஒளிவிளக்காக சுவாமி பிரகாஷானந்தா ஜி  இருந்தார்அவரது தன்னலமற்ற சேவைகள், மிகவும் ஏழ்மையானவர்களை மேம்படுத்தியது.  ஸ்ரீ நாராயண குருவின் உயர்ந்த எண்ணங்களை பிரபலப்படுத்துவதில், அவர் முன்னிலை வகித்தார். அவரது மறைவால் வேதனையடைந்தேன். ஓம் சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்

***


(வெளியீட்டு அடையாள எண்: 1733379) வருகையாளர் எண்ணிக்கை : 231