சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடந்த 24 மணி நேரத்தில் 84,332 புதிய பாதிப்புகள்; 70 நாட்களுக்குப் பிறகு மிகக் குறைவு

Posted On: 12 JUN 2021 11:36AM by PIB Chennai

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 84,332 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 5-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளன.

நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 10,80,690 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் வெறும் 3.68 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 12-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 40,981 குறைந்துள்ளனர்.

தொடர்ந்து 30-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,21,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விட கூடுதலாக 36,979 பேர் குணமடைந்தனர்.

இதுவரை மொத்தம் 2,79,11,384 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 95.07 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,21,311 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 19,20,477 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,62,32,162 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 4.94 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 4.39 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக ள்ளது.

 

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 25 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி நேரத்தில் 34,33,763 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி மொத்தம் 34,64,228 முகாம்களில் 24,96,00,304 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726459

***



(Release ID: 1726505) Visitor Counter : 164