சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடந்த 24 மணி நேரத்தில், 20 லட்சம் கொவிட் பரிசோதனைகள்: உலக சாதனை படைத்தது இந்தியா

Posted On: 19 MAY 2021 12:28PM by PIB Chennai

இந்தியாவில் கொவிட் தொற்றிலிருந்து தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 6 வது நாளாக, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2,19,86,363 எட்டியுள்ளது. இவர்களின் சதவீதம் 86.23 சதவீதமாக உள்ளது

தொடர்ந்து கடந்த 3 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 74.46 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் அதிகபட்சமாக 33,059 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவில் 31,337 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொருபுறம், நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 31,26,719-ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 1,27,046 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20.08  லட்சம்  கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இது நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் மிக அதிக அளவு மற்றும் உலக சாதனையாகும்நாட்டில் இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 18.58 கோடியை கடந்து விட்டதுஇன்று காலை 7 மணி வரை 27,10,934 முகாம்கள் மூலம் 18,58,09,302 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்  குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719843

------


(Release ID: 1719899) Visitor Counter : 259