சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா பாதிப்பிலிருந்து தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 4 லட்சத்திற்கும் மேல் உயர்வு

Posted On: 18 MAY 2021 1:27PM by PIB Chennai

கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக, முதன்முறையாக ஒரே நாளில்  நான்கு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 14 நாட்களில் சராசரியாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 3,55,944 ஆக பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,15,96,512 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 85.60 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,53,765 ஆக இன்று சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 13.29% ஆகும்.

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 18.44 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 26,87,638 முகாம்களில் 18,44,53,149 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38,603 பேரும், அதைத்தொடர்ந்து  தமிழகத்தில் 33,075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தேசிய உயிரிழப்பு வீதம், இந்தியாவில் தற்போது 1.10 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1000 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 476 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719558

------(Release ID: 1719585) Visitor Counter : 120