மத்திய அமைச்சரவை
இந்திய போட்டி ஆணையம்(சிசிஐ), பிரேசில் பொருளாதார பாதுகாப்புக்கான நிர்வாக கவுன்சில்(கேட்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
20 APR 2021 3:46PM by PIB Chennai
இந்திய போட்டி ஆணையத்திற்கும்(சிசிஐ), பிரேசில் பொருளாதார பாதுகாப்புக்கான நிர்வாக கவுன்சிலுக்கும்(கேட்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய போட்டி ஆணையம், தனது கடமைகளையும், பணிகளையும் செய்வதற்காக, எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்ய போட்டி சட்டம், 2002-ன் 18வது பிரிவு அனுமதிக்கிறது.
அதன்படி, இந்திய போட்டி ஆணையம் கீழ்கண்ட ஆறு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது:
1. கூட்டு வர்த்தக ஆணையம் மற்றும் நீதித்துறை (அமெரிக்கா)
2. போட்டி தலைமை இயக்குனர், ஐரோப்பிய ஒன்றியம்
3. கூட்டாட்சி ஏகபோகத்துக்கு எதிரான சேவை, ரஷ்யா
4. ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்
5. போட்டி அலுவலகம், கனடா
6. பிரிக்ஸ் போட்டி ஆணையங்கள்.
தற்போதைய திட்டமும், இந்திய போட்டி ஆணையத்திற்கும், பிரேசில் பொருளாதார பாதுகாப்புக்கான நிர்வாக கவுன்சிலுக்கும் இடையே இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பானவை.
*****************
(Release ID: 1712889)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada