பிரதமர் அலுவலகம்
மகாமண்டலேஸ்வர் பூஜ்யா சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜி அவர்களுடன், பிரதமர் பேச்சு
இரண்டு ஷாகி ஸ்நானங்களுக்குப் பிறகு கும்பமேளாவை அடையாளமாக நடத்திட வேண்டுகோள்
துறவிகளின் உடல்நிலை குறித்து விசாரிப்பு
प्रविष्टि तिथि:
17 APR 2021 9:25AM by PIB Chennai
மகாமண்டலேஸ்வர் பூஜ்யா சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜி அவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, துறவிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய துறவிகளின் சங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இரண்டு ஷாகி ஸ்நானங்கள் (ராஜ குளியல்) நடைபெற்று முடிந்திருப்பதால், கும்பமேளாவை அடையாளமாக நடத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் வலுவடையும்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று பதிலளித்த மகாமண்டலேஸ்வர் பூஜ்யா சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜி அவர்கள், ஸ்நானத்தில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரவேண்டாம் என்றும், கொவிட் சரியான வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
-------
(रिलीज़ आईडी: 1712409)
आगंतुक पटल : 300
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada