சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
8 கோடியை நெருங்கியது கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை
Posted On:
05 APR 2021 11:48AM by PIB Chennai
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 12,31,148 முகாம்களில் 7,91,05,163 பயனாளிகளுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
79-வது நாளான நேற்று (ஏப்ரல் 04, 2021) நாடு முழுவதும் 16,38,464 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
இந்தியாவில் அன்றாட புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (1,03,558) புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், கர்நாடகா,உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 81.90 விழுக்காடு பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 57,074 பேரும், சத்திஸ்கரில் 5,250 பேரும், கர்நாடகாவில் 4,553 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 7,41,830 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 5.89 சதவீதமாகும்.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,16,82,136 ஆக (92.8%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 52,847 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 478 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709600
-------
(Release ID: 1709668)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam