பிரதமர் அலுவலகம்

திரு ரஜினிகாந்திற்கு தாதாசாஹேப் பால்கே விருது : பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2021 11:17AM by PIB Chennai

திரு ரஜினிகாந்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல தலைமுறைகளைக் கடந்த பிரபலம், வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் பெருமைமிகு படைப்பாற்றல், பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்கள், அனைவரின் அன்பிற்கு உரியவரான ஆளுமை.... அதுதான் நீங்கள், திரு ரஜினிகாந்த் அவர்களே.

தலைவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1708892) வருகையாளர் எண்ணிக்கை : 271