பிரதமர் அலுவலகம்
அம்ரித் மகாத்சவம் நிகழ்ச்சி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கவுள்ளது: பிரதமர்
‘உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்பது’ காந்திக்கும் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் செலுத்தும் அற்புதமான புகழாரம்
Posted On:
12 MAR 2021 10:00AM by PIB Chennai
அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரையை’ (சுதந்திர யாத்திரை) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் .
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இன்றைய அம்ரித் மகோத்சவ நிகழ்ச்சி, தண்டி யாத்திரை தொடங்கிய சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்குகிறது. இந்த யாத்திரை இந்திய மக்களின் பெருமிதத்தையும், தற்சார்பு இந்தியா என்ற உணர்வையும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ‘உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்பது’ என்பது, காந்தியடிகளுக்கும், நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் செலுத்தும் அற்புதமான புகழாரமாகும்.
ஏதாவது உள்ளூர் தயாரிப்பை வாங்கி, ‘உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்’ என்ற வாசகத்துடன், சமூக ஊடகங்களில் அந்தப் படத்தைப் பதிவிடுங்கள். சபர்மதி ஆசிரமத்தில், மகன் நிவாஸ் அருகே ஒரு இராட்டை நிறுவப்படவுள்ளது. தற்சார்பு இந்தியா தொடர்பான ஒவ்வொரு சுட்டுரைக்கும், இந்த இராட்டை ஒரு முழு சுற்று சுற்றும். இது மக்கள் இயக்கத்துக்கு வினையூக்கியாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
*******
(Release ID: 1704313)
Visitor Counter : 208
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam