சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள்: 1.06 கோடியாக உயர்வு
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2021 11:16AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.36 லட்சமாகக் (1,36,549) குறைந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.25 சதவீதமாகும்.
18 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
பிப்ரவரி 17, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 2,90,248 பேர், புதுச்சேரியில் 6,957 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 90 லட்சம் (89,99,230) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
1,91,373 முகாம்களில் 61,50,922 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 2,76,377 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 25,71,931 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 32-ஆம் நாளில் (பிப்ரவரி 16, 2021) 7,001 முகாம்களில் 2,76,943 பயனாளிகளுக்கு (1,60,691 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 1,16,252 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,44,858 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,610 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 4,937 பேரும், மகாராஷ்டிராவில் 3,663 பேரும், தமிழ்நாட்டில் 451 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 100 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698602
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1698714)
வருகையாளர் எண்ணிக்கை : 221
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam