சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக குறைவு

Posted On: 12 FEB 2021 10:53AM by PIB Chennai

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து இன்று 1.35 லட்சமாக (1,35,926) உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில், ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும், 1000க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 1000க்கும் குறைவாக புதிய பாதிப்புகள் உள்ளன. 4 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எந்த பாதிப்பும் இல்லை.

தினசரி கொவிட் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 18 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தி்ல 15,858 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.32 சதவீதமாக உள்ளது. இது உலகளவில் மிக அதிகம். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,89,230-ஆக உள்ளது.

 2021-ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி காலை 8 மணி வரை, 75 லட்சம் பேர் (75,05,010) கொவிட்-19 தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் 58,14,976 பேர் சுகாதார பணியாளர்கள், 16,90,034 பேர் முன்களப் பணியாளர்கள். 27ம் நாளான நேற்று, 4,87,896 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிகபட்சமாக, தினசரி பாதிப்பு 5,281 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

*****************



(Release ID: 1697375) Visitor Counter : 147