சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
19 நாட்களில் சுமார் 4.5 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2021 11:27AM by PIB Chennai
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
19 நாளில் சுமார் 4.5 மில்லியன் பேருக்கு (44,49,552) கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனைத்தொட மற்ற சில நாடுகள் 65 நாட்கள் எடுத்துக்கொண்டன. நாடுமுழுவதும் தடுப்பூசிப் போடும் இயக்கத்தை இந்தியா கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று தொடங்கியது. கொவிட்-19-க்கான தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும்.
7 மாநிலங்களில் இருந்து 54.87 சதவீதப் பயனாளிகள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,10,604 பேருக்கு 8,041 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதுவரை 84,617 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,55,025 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.5 சதவீதத்திற்கும் குறைவானதேயாகும் (1.44%).
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விகிதம் 1.82 சதவாதமாக இன்று உள்ளது. கடந்த சில வாரங்களாக பாதிப்பின் விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை 1,04,80,445 ஆக உள்ளது. பாதிப்பிலிருந்து குணமடைவோரின் விகிதம் 97.13 சதவீதமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695051
******
(Release ID: 1695051)
(வெளியீட்டு அடையாள எண்: 1695130)
வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
Marathi
,
Punjabi
,
Telugu
,
Malayalam
,
Assamese
,
Odia
,
English
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Gujarati