பிரதமர் அலுவலகம்

மேகாலயா மாநிலம் உருவான தினம்: பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 21 JAN 2021 9:00AM by PIB Chennai

மேகாலயா மாநிலம் உருவான தினமான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு.மோடி விடுத்துள்ள  சுட்டுரைப் பதிவில், “மேகாலயா மாநிலம் உருவான தினமான இன்று, அம்மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். பேரன்புக்கும், சகோதரத்துவத்துக்கும் பெயர் பெற்றது மேகாலயா. அம்மாநிலத்தின் இளைஞர்கள் புத்தாக்கமும், தொழில் முனைவும் நிறைந்தவர்கள். வருங்காலத்தில் மேகாலயா மேலும் முன்னேறி புதிய உயரங்களை அடையட்டும்” என்று கூறியுள்ளார்.

 

****


(रिलीज़ आईडी: 1690731) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam