பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 தடுப்பூசி வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டதற்காக, பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் அண்டை நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து
Posted On:
18 JAN 2021 5:22PM by PIB Chennai
கொவிட்-19 தடுப்பூசி, இம்மாதம் 16ஆம் தேதியன்று வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் அண்டை நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் திரு கொத்தபயா ராஜபக்சே விடுத்துள்ள சுட்டுரையில், ‘‘கொவிட்-19 தடுப்பூசி வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் மற்றும் நட்பு அண்டை நாடுகளுடனான அவரது தாராள மனப்பான்மைக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பிரதமர் திரு மகிந்தா ராஜபக்சே தனது சுட்டுரைச் செய்தியில், ‘‘இந்த மிகப் பெரிய கொவிட் தடுப்பூசித் திட்டம் என்ற முக்கியமான நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் வாழ்த்துகள். இந்த பேரழிவுத் தொற்று முடிவின் தொடக்கத்தை நாம் பார்க்கத் தொடங்கியுள்ளோம்.’’ என கூறியுள்ளார்.
மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சாலிஹ் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ கொவிட்-19க்கு எதிராக இந்திய மக்களுக்கு தடுப்பூசி போடும் இந்திய அரசின் மைல்கல் திட்டத்துக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் வாழ்த்துகள். இந்த முயற்சியில் நீங்கள் வெற்றியடைவீர்கள் என நான் அதிக நம்பிக்கையுடன் உள்ளேன். இறுதியாக, கொவிட்-19 பேரழிவுக்கு முடிவு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பூடான் பிரதமர் டாக்டர் லோடே ஷெரிங் தனது சுட்டுரைச் செய்தியில், ‘‘நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் மைல்கல் தொடக்கத்துக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள். இந்த தொற்று நோயால் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்களை போக்கும் வகையில் இந்தத் தடுப்பூசி வந்துள்ளது என நாம் நம்புவோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
**********************
(Release ID: 1689750)
Visitor Counter : 227
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam