பிரதமர் அலுவலகம்

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில், பிரதமர் புகழஞ்சலி

Posted On: 17 JAN 2021 2:12PM by PIB Chennai

தமிழக முன்னாள் முதல்வர்  டாக்டர் எம்.ஜி ராமசந்திரனின்  பிறந்த நாளில், அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். திரைப்படங்கள் முதல் அரசியல் வரை,  மக்கள் மனதில் ஆட்சி செய்தவர் எம்ஜிஆர் என அவர் கூறினார். நாட்டின் பல பகுதிகளிலில் இருந்து குஜராத்தில உள்ள கெவாடியாவுக்கு,  8 ரயில்கள் மற்றும் குஜராத்தில் பல ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் திரு நரேந்திர மோடி பேசினார்.

 அப்போது, கெவாடியாவுக்கு செல்லும் ரயில்களில் ஒன்று டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வருகிறது என குறிப்பிட்ட பிரதமர்,  பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்த நாளில் அவருக்கு புகழாரம் சூட்டினார்.

சினிமா மற்றும் அரசியலில் அவரது சாதனைகளை திரு நரேந்திர மோடி புகழ்ந்தார். எம்ஜிஆரின்  அரசியல் பயணம் ஏழை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றும்  ஏழை மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்காக அவர் இடைவிடாது பாடுபட்டவர் என பிரதமர் குறிப்பிட்டார்.

 அவரது கொள்கைகளை நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம் என்றும்  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டதை  பிரதமர் நினைவு கூர்ந்தார்.

-----


(Release ID: 1689349) Visitor Counter : 135