சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகின் மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கப்பட்ட இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று

Posted On: 16 JAN 2021 11:37AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரில் இன்றைய தினம் ஒரு மிக முக்கியமான நாளாகும். கொவிட்-19 தடுப்பு மருந்தை இந்தியா முழுவதும் வழங்கும் நடவடிக்கையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் தற்போதுள்ள கொரோனா பாதிப்புகள் மேலும் குறைந்து இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளில் வெறும் 2%, அதாவது 211033 ஆக உள்ளது. இதற்கு முன்னர் 2020 ஜூன் 29 அன்று பாதிப்புகளின் எண்ணிக்கை இந்த அளவில் (210120) இருந்தது.

இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 96 சதவீதத்தை கடந்து 96.56% என்னும் அளவில் உள்ளது.  குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியை (10179715) தாண்டியுள்ளது.

நாட்டில் உள்ள 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 5 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளை கண்டு வருகின்றன. இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போதைய மொத்த பாதிப்புகளில் வெறும் 15 சதவீதமாகும்.

குணமடைந்தவர்களில் 81.94 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கின்றனர். நாட்டிலேயே கேரளாவில் தான் தினசரி குணமடைதல்கள் எண்ணிக்கை (4603) அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3500 பேரும் சத்தீஸ்கரில் 1009 நோயாளிகளும் குணமடைந்துள்ளனர்.

புதிய பாதிப்புகளில் 80.81 சதவீதம் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கின்றன. நாட்டிலேயே கேரளாவில் தான் தினசரி பாதிப்புகள் எண்ணிக்கை (5624) அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3145 புதிய பாதிப்புகளும் மேற்கு வங்கத்தில் 708 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 45 பேரும், கேரளாவில் 23 நபர்களும், மேற்கு வங்கத்தில் 16 பேரும் உயிரிழந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689018

                                     -----



(Release ID: 1689108) Visitor Counter : 246