சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தினசரி கொரோனா வைரஸ் தொற்று 16,500-க்கு கீழ் குறைந்தது: குணமடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தை கடந்தது
प्रविष्टि तिथि:
29 DEC 2020 11:02AM by PIB Chennai
கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. தினசரி புதிய பாதிப்பு இன்று 16,432 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 187 நாட்களில் மிக குறைவான எண்ணிக்கைக்கும் இதற்குமுன் கடந்த ஜூன் 25ம் தேதி, தினசரி புதிய தொற்று 16,922 ஆக இருந்தது.
நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2,68,581-ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.63 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 8,720 குறைந்துள்ளது.
குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், தினசரி புதிய தொற்று குறைவதாலும், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியை (98,07,569) நெருங்குகிறது. இதனால் குணமடைந்தோர் பங்கு 95.92 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 24,900 பேர் குணமடைந்துள்ளனர். 252 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=
*****************
(रिलीज़ आईडी: 1684347)
आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam