பிரதமர் அலுவலகம்

இந்திய-அமெரிக்கக் கூட்டணி தொடர்பான ஒருமித்த கருத்தை அதிகரித்ததற்கான அங்கீகாரம்: அமெரிக்காவின் ‘லெஜியன் ஆஃப் மெரிட்’ விருதை பெற்றுக்கொண்டு பிரதமர் கருத்து

Posted On: 22 DEC 2020 8:59PM by PIB Chennai

அமெரிக்க அரசு வழங்கியுள்ள  ‘லெஜியன் ஆஃப் மெரிட்விருது, தமக்குக் கிடைத்த மிக உயர்ந்த கௌரவம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “திரு டொனால்ட் ட்ரம்ப்-இடமிருந்துலெஜியன் ஆஃப் மெரிட்விருது எனக்குக் கிடைத்தது மிக உயரிய கௌரவம் ஆகும். இந்திய-அமெரிக்கக் கூட்டணி தொடர்பாக இரு நாடுகளில் நிலவும் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.

21ஆம் நூற்றாண்டு எதிர்பாராத சவால்களையும், அதே வேளையில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதுஒட்டுமொத்த மனித சமூகமும் பயனடையும் வகையில் சர்வதேசத் தலைமையை வழங்குவதற்கு இருநாட்டு மக்களின் தனித்தன்மையான பலத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய-அமெரிக்க உறவு அமையும்.

இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக எனது அரசு, அமெரிக்க அரசு மற்றும் இருநாடுகளின் இதரப் பங்குதாரர்களுடன் தொடர்ந்து பணிபுரியும் என்று இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் சார்பாக நான் உறுதி அளிக்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

*****************


(Release ID: 1682961) Visitor Counter : 156