சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைக் கடந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
18 DEC 2020 11:25AM by PIB Chennai
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா இன்று முக்கியமான சாதனை படைத்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று 95 லட்சத்தைக் (95,20,827) கடந்துள்ளது.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களை விட 92 லட்சத்துக்கும் மேல் (92,06,996) அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 95.40 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் வீதம் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது 3,13,831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில 3.14 சதவீதம்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 22,890 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், 31,087 பேர் குணமடைந்துள்ளனர், 338 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681661
*******
(Release ID: 1681661)
(வெளியீட்டு அடையாள எண்: 1681711)
வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam